நோயாளிகள் நலன், மருத்துவர் நலன், மருத்துவ ஆவணங்கள் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கியதாக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ்.தமிழக அரசின் முயற்சியால் விருது கிடைத்துள்ளதாக முதல்வர் பெருமிதம்.
மத்திய அரசின் தேசிய தர நிர்ணய வாரியம், நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சை, நன்கு கவனித்து கொள்ளுதல், சிகிச்சையை மேம்படுத் துதல், தொற்றை கட்டுப் படுத்துதல் உள்ளிட்ட 10 அம்சங்களில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு மருத்துவமனைகளுக்கு, தேசிய தர நிர்ணய சான்றிதழ் வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை உட்பட ஐந்து மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.தனியார் மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் குறிப்பிட்ட துறைகள், இவ்விருதை பெற்றுள்ளன. தற்போது முதல் முறையாக, நோயாளிகள் நலன், மருத்துவர் நலன், மருத்துவ ஆவணங்கள் உள்ளிட்டவற்றில் சிறந்து விளங்கிய ஐந்து அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கு, ஒரே நேரத்தில் விருது கிடைத்துள்ளது.இதுகுறித்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் லீயோ டேவிட் கூறும்போது, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு தேசிய தர சான்றிதழ் கிடைத்தது மகிழ்ச்சியாக உள்ளது எனவும்,குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை,தூத்துக்குடியை சேர்ந்த நோயாளிகளும் இந்த மருத்துவக்கல்லூரியில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.மருத்துவமனையின் கட்டமைப்புகள்,சிகிச்சையின் தரம்,நோயாளிகளின் உரிமை பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி படுத்தியதால் இந்த விருது கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.தமிழக அரசின் முயற்சியால் இது கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். பேட்டியின் போது ஆரம்மோ விஜயலட்சுமி டாக்டர் கிங்ஸ்லி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்
