மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதிக்கு முதல் வேட்பு மனுவாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காசிராமன் வேட்பு மனு தாக்கல். அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து ஏர் கலப்பையுடன் மாட்டு வண்டியில் ஊர்வலமாக வந்து வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார்:-
மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் இன்று துவங்கப்பட்ட நிலையில் முதல் வேட்பு மனுவாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் காசி ராமன் வேட்பு மனு தாக்கல் செய்தார். போக்குவரத்து கழக பணிமனை முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு கட்சியினருடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செய்த நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை மாநில துணைத்தலைவரான வேட்பாளர் காசி ராமன் தோளில் ஏர் கலப்பையை சுமந்து மாட்டு வண்டியில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் புடை சூழ மயிலாடுதுறை நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாக வந்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணு பிரியாவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
உடன் மாநில கொள்கை பரப்பு செயலாளர் காளிதாஸ் உடன் இருந்தார். மாற்று வேட்பாளராக சுப்ரமணியன் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். தொடர்ந்து மயிலாடுதுறை சீர்காழி தொகுதி செலவின பார்வையாளர் ரூபேஷ் அக்ரவால் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகளை ஆய்வு செய்தார்.
