நான் திமுக உறுப்பினர், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் அறிவிப்பு, திமுக கொடி கட்டிய காரில் திமுக போராட்டத்தில் பங்கேற்ற நிலையில் மதிமுகவிலிருந்து விலகியதான செய்தியாளர் கேள்விக்கு பதில் :-
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் மதிமுக சார்பில் வழக்கறிஞர் செந்தில் செல்வன் உதயசூரியன் சின்னத்தில் நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகி தமிழக வெற்றிக்காக கூட்டணியில் இணைந்த போது, செந்தில் செல்வன் பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டார் ஆனால் தொடர்ந்து மதிமுக கரை வேட்டியை கட்டிக் கொண்டும், மதிமுக கொடி கட்டிய காரில் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் திமுக மகளிர் அணி சார்பில் இன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற செந்தில் செல்வன், திமுக கொடி கட்டிய காரில் வந்திருந்தார். இது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்ட பொழுது, நான் திமுக உறுப்பினர் தான் அதனால் இப்படி வந்தேன் என்று தெரிவித்தார்.
பைட் :-
செந்தில் செல்வன் சட்டமன்ற உறுப்பினர்







