கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாகும் இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷ வர்தன்

சினிமா உலகில் பிரபலங்களின் வாரிசுகள் நடிகராகவோ அல்லது நடிகையாகவோ களமிறங்குவது சாதாரணமான விஷயமாகிவிட்டது. விஜய், சூர்யா, தனுஷ், கார்த்தி, ஜெயம் ரவி, சிம்பு, அருண்விஜய் போன்ற முன்னணி நடிகர்கள் அனைவரும் தந்தை வழியில் சினிமாவுக்கு வந்தவர்களே.

அந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர் வித்யாசாகரின் மகன் ஹர்ஷ வர்தன் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். இவரை அறிமுகப்படுத்தும் படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படம், லிங்குசாமியின் ஹிட் படமான பையா போலவே ரொமான்டிக் ரோடு டிராவல் கதையை மையமாகக் கொண்டதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஹர்ஷ வர்தன், சில ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது அவர் ஹீரோவாகவும் களமிறங்குவது ரசிகர்களிடம் புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Exit mobile version