தமிழ் திரையுலகில் ஐம்பது ஆண்டுகளாக இசை உலகில் தனித்துவம் செலுத்தி வரும் மூத்த இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1967-ஆம் ஆண்டு மகராசி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அவர், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களுக்கு நூற்றுக்கணக்கான பாடல்களை அமைத்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
இந்நிலையில், இன்று காலை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், குடும்பத்தினர் அவரை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திரையுலக பிரபலங்களும், அவரது ரசிகர்களும் சங்கர் கணேஷ் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென சமூக வலைதளங்களில் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.