திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்கள் குறித்து துறைவாரியாக கண்காணிப்பு குழு உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து முதல் நிலை அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு துணைத் தலைவருமான முரசொலி பேசும்போது…
அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் அரசு அலுவலர்கள் முழு உழைப்புடன் செயல்பட வேண்டும். சுய உதவி குழுக்களின் செயல்பாடுகளை விரைவு படுத்த வேண்டும், மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும், மாற்று திறனாளிகளுக்கு உரிய நலத்திட்டங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருள்செல்வன் உள்ளிட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள் அனைத்து நகர மன்ற உறுப்பினர்கள் பேரூராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்

















