எடப்பாடி, பழனிச்சாமி, விஜய், அன்புமணி உள்ளிட்ட எதிர்கட்சியினர் அனைவருக்கும் பதிலளிக்கும் விதமாக முப்பெரும் விழா இருக்கும் என விழுப்புரம் திமுக எம் எல் ஏ லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் தெரிவிக்கையில்: ஜீலை 1 ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தினை துவக்கி வைத்து அரசியல் அநீதிகளுக்கு எதிராக துவங்கபட்டதில் இரண்டு மாதங்களில் ஒவ்வொரு குடும்பம் குடும்பமாக சென்று ஓரணியில் அனைவரையும் இணைத்துள்ளதாகவும் ஓரணியில் தமிழ்நாடு இணைப்பில் விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் மட்டும் விழுப்புரம், வானூர் தொகுதியில் 2 லட்சத்து 648 பேர் ஓரணியில் தமிழ்நாட்டில் இணைந்துள்ளதாக தெரிவித்தார்.
நாளைய தினம் விழுப்புரத்தில் 569 வாக்குசாவடியில் ஓரணியில் தமிழ்நாட்டில் இணைத்து கொண்டவர்கள் சேர்ந்து உறுதி மொழியை ஏற்பார்கள் என்றும் கரூரில் 17 ஆம் தேதி நடைபெற உள்ள முப்பெரும் விழாவில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொள்ள உள்ளதாகவும் 20 ஆம் தேதி ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற உள்ளதில் முப்பெரும் விழாவில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் எடுத்து செல்லப்படும் என கூறினார். மேலும் எடப்பாடி, பழனிச்சாமி, விஜய், அன்புமணி உள்ளிட்ட எதிர்கட்சியினர் அனைவருக்கும் பதிலளிக்கும் விதமாக முப்பெரும் விழா இருக்கும் என விழுப்புரம் திமுக எம் எல் ஏ லட்சுமணன் தெரிவித்துள்ளார்.


















