மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமம் வேலு தெருவில் வசித்து வருபவர் வேலு.குபேந்திரன். மயிலாடுதுறை வழக்கறிஞர் சங்கத் தலைவராக உள்ள இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் ஆவார். வழக்கறிஞர் வேலு.குபேந்திரன் தனது இடத்துடன் சாலை மற்றும் நீர்நிலை புறம்போக்கை ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும், வீட்டின் முன்பு வாகனங்களை போட்டு சாலையில் போவோருக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்நிலையில் தனது சொந்த பட்டா இடத்தில்தான் சாலையே உள்ளதாகவும், அதனை ஆக்ரமித்து ரோடு அமைப்பதற்கு தடைகோரி நீதிமன்றத்தில் வேலு.குபேந்திரன் வழக்கு தொடர்ந்து வழக்கு எண். 48/2023 நிலுவையில் உள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக கடந்த சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இன்று வருவாய்த் துறையினர் இடத்தை அளந்துள்ளனர். உடனடியாக வேலைியை அப்புறப்படுத்த கோரி அப்பகுதியைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் வழக்கறிஞர் வீட்டு வேலியை பிரித்து அவர் வீட்டு வாசலில் இருந்து வெளியேற முடியாதவாறு சாலையில் போட்டுள்ளனர். செல்போனில் படம் பிடித்த இளம் வழக்கறிஞரை கல்லைக் கொண்டு எரிந்து தாக்க முற்பட்டுள்ளனர். வேலியை பிரித்து எரிந்து கல்லால் தாக்க முயற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்துள்ள வழக்கறிஞர் வேலு.குபேந்திரன் கூறுகையில் என்னுடைய பட்டா இடத்தை ஆக்ரமம் செய்ததாக கூறப்படும் நிலையில் நான் ஆக்ரமிப்பு செய்யவில்லை என்று நிரூபிப்பதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து நீதிமன்றம் ஆனையின்பேரில் நில அளவையர் நியமிக்கப்பட்டு அவர்கள் அளந்ததற்கு பிறகு சட்டவிரோத கும்பல் இன்று வேலியை பிரித்து எரிந்து என்னை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். மேலும் வீடியோ எடுத்ததற்காக என்னுடைய இளம் வழக்கறிஞரை தாக்கியும் மற்றொரு வழக்கறிஞர் காரின் டயரை சேதப்படுத்தி நான் வீட்டை விட்டு வெளியே செல்லமுடியாதவாறு வீட்டு சாலையின் முன்பு பிரித்து எரிந்த வேலியை போட்டு கொலைமிரட்டல் விடுத்துள்ள நபர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட எஸ்பியிடம் புகார் தொவித்துள்ளதாக வழக்கறிஞர் கூறியுள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















