திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான மோகனச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026-யை முன்னிட்டு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் படி இன்று முதல் வேட்பு மனுவை பல்வேறு கட்சி நிர்வாகிகள் தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வேட்பு மனு தாக்கல் செய்யும் இடமான திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும் திருவாரூர் மாவட்ட ஆட்சியருமான மோகனச்சந்திரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் இடங்களில் செய்யப்பட்ட வரும் பணிகள் குறித்தும், வேட்பு மனு தாக்கலுக்கு தேவையான படிவங்கள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா என்பதை குறித்தும் தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித் தலைவர் மோகனச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வாக்காளர்களுக்கு வழங்கப்படும் கையேடு ஆங்கில வடிவில் இருப்பதை கண்டு, அங்கிருந்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சித் தலைவர் உடனடியாக தமிழ் வடிவிலும் வாக்காளர் கையேடு வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்வில் திருவாரூர் தேர்தல் நடத்தும் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான சத்யா, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமச்சந்திரன், தேர்தல் துணை வட்டாட்சியர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்

















