திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு ஊராட்சிகளில் ரூ.3.08 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்கள், நியாயவிலை கடைகள், பயணியர் நிழற்கூடங்கள் மற்றும் சமுதாயக் கூடங்களை மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.அவர், ரூ.36.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய வகுப்பறைகள் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டியதுடன், ரூ.2.72 கோடி மதிப்பிலான முடிவுற்ற 14 கட்டிடத் திட்டங்களை திறந்து வைத்தார்.
மாண்புமிகு அமைச்சர் அவர்கள் திறந்து வைத்த திட்டங்களில் முக்கியமானவை: சிந்தலவாடம்பட்டி ஊராட்சி இராமபட்டிணம் புதூர் – ரூ.13.56 லட்சம் மதிப்பிலான நியாயவிலை கடை கட்டிடம் விருப்பாட்சி ஊராட்சி விருப்பாட்சி கிராமம் – ரூ.12.67 லட்சம் மதிப்பிலான நியாயவிலை கடை கட்டிடம் சாமியார்புதூர் கிராமம் மற்றும் அரசப்பிள்ளைபட்டி ஊராட்சி – மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பிலான பயணியர் நிழற்கூடங்கள் அரசப்பிள்ளைபட்டி ஊராட்சி – ரூ.50 லட்சம் மதிப்பிலான சமுதாயக்கூடம் லெக்கையன்கோட்டை ஊராட்சி குழந்தைவேல்கவுண்டன்புதூர் கிராமம் – ரூ.9.97 லட்சம் மதிப்பிலான நியாயவிலை கடை கட்டிடம் கொல்லப்பட்டி ஊராட்சி – ரூ.50 லட்சம் மதிப்பிலான சமுதாயக்கூடம் மற்றும் ரூ.28.01 லட்சம் மதிப்பிலான ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கொல்லப்பட்டி அருகில் – ரூ.30 லட்சம் மதிப்பிலான புதிய பாலம் காளாஞ்சிப்பட்டி ஊராட்சி – ரூ.10 லட்சம் மதிப்பிலான பயணியர் நிழற்கூடம் புலியூர்நத்தம் மற்றும் பி.என்.கல்லுப்பட்டி கிராமங்கள் – ரூ.28 லட்சம் மதிப்பிலான அங்கன்வாடி மையக் கட்டிடங்கள் சின்னக்குழிப்பட்டி கிராமம் – புதிய நியாயவிலை கடை கட்டிடம் மேலும், கொல்லப்பட்டி ஊராட்சி அரசு கள்ளர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ரூ.36 லட்சம் மதிப்பிலான புதிய வகுப்பறைகள் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நாட்டினார்.
இந்நிகழ்ச்சிகளில் பேசுகையில், மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள் கூறியதாவது: “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.எந்தத் திட்டமும் ஒரு கட்சிக்கோ, மதத்துக்கோ, சமூகத்துக்கோ மட்டும் அல்ல; ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற கொள்கையோடு அரசு செயல்பட்டு வருகிறது.” “காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.1000 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு, முடிவடையும் தருவாயில் உள்ளது. திட்டம் நிறைவேறியவுடன் ஒட்டன்சத்திரம், பழனி உட்பட 93 ஊராட்சிகள் தலா ஒருவருக்கு தினமும் 55 லிட்டர் குடிநீர் பெறுவார்கள்.
இது அடுத்த 30 ஆண்டுகளுக்கான நீர்வளத் தேவையை பூர்த்தி செய்யும்.” “மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பொதுமக்கள், விவசாயிகள், மாணவர்கள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
மக்கள் நம்பிக்கையோடு இந்த ஆட்சிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்,”
என்று அமைச்சர் சக்கரபாணி அவர்கள் வலியுறுத்தினார். இந்நிகழ்ச்சிகளில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் திரு. ஜி. டி. ஸ்ரீ ராகவ் பாலாஜி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) திரு. பிரபாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. பிரபு பாண்டியன், திரு. காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



















