மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் மார்கழி மாத திருப்பள்ளி எழுச்சி நிகழ்ச்சி, அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன, புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர் :-
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சமய குறவர்களால் பாடல் பெற்றதும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது, ஆலயத்தில் மார்கழி மாதத்தை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற ஆராதனை நிகழ்ச்சியில் திருவம்பாவை பாடப்பட்டது. தொடர்ந்துஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
