திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய இயக்குனர் நாராயணமூர்த்தி காலமானார்.
‘மனதை திருடிவிட்டாய்’, ‘ஒரு பொண்ணு ஒரு பையன்’ போன்ற திரைப்படங்களை இயக்கிய அவர், ‘நந்தினி’, ‘ராசாத்தி’, ‘ஜிமிக்கி கம்மல்’, ‘அன்பே வா’, ‘மருமகளே வா’ உள்ளிட்ட பல பிரபலத் தொடர்களையும் இயக்கியிருந்தார்.
சில நாட்களாக உடல்நலக் குறைவால் ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று இரவு 8.30 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.
இவருக்கு மனைவி அம்சவேணி, மகன் லோகேஸ்வரன் உள்ளனர். தற்போது லண்டனில் பணியாற்றி வரும் அவரது மகன் இந்தியா திரும்பிய பிறகு, வரும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 26) பம்மலில் உள்ள இல்லத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
