14 வயது சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், பிரபல மலையாள நடிகை மினு முனீரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
போலீஸ் தகவலின்படி, சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு, சீரியலில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி, அப்போது 14 வயதான சிறுமியை மினு முனீர் சென்னை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு, சிறுமி மீது நான்கு பேர் பாலியல் துஸ்செயல் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சம்பவத்துக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், கேரளாவில் இருந்த மினு முனீரை திருமங்கலம் போலீசார் கைது செய்து, சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குறிப்பாக, இதற்கு முன்பு மினு முனீர், பிரபல மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடைவேளை பாபு ஆகியோருக்கு எதிராகவும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.