சென்னை :
சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டாவை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்திருக்கிறார் என தகவல்கள் வெளியாகி, சமூக வலைதளங்களில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பையோவிலேயே ‘ரங்கராஜ் ரமேஷ் – ஹஸ்பண்ட்’ என குறிப்பிட்டு இருப்பதும், அவர் சமீபத்தில் தான் 6 மாதம் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்ததுமாக இரண்டும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையடுத்து, ரங்கராஜ் – ஜாய் திருமணமானது அதிகாரப்பூர்வமா? அவரது முதல் மனைவி ஸ்ருதியுடன் விவாகரத்து ஆனதா என்பது தொடர்பாக நெட்டிசன்களில் பல கேள்விகளை எழுப்பி உள்ளது.

மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி ஸ்ருதி ரங்கராஜ், ஒரு வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இருவருக்கும் 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். ஸ்ருதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெயரை மாற்றாமல் வைத்திருப்பது, சமீபத்திய பதிவில் கணவர் ரங்கராஜ் மற்றும் குழந்தைகளுடன் உள்ள புகைப்படங்களை பகிர்ந்திருப்பது போன்றவை, விவாகரத்து நடக்கவில்லை என்றே பலரையும் நம்ப வைக்கிறது.
இந்நிலையில், ரங்கராஜ் தனது முதல் மனைவியிடம் அனுமதி பெற்று இரண்டாவது திருமணம் செய்திருக்கலாம் என்றும், சட்டப்படி இது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மாதம்பட்டி ரங்கராஜ் இதுகுறித்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் அளிக்காத நிலையில், அவரது இரு திருமணங்கள் குறித்த விவாதம் தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது.