சமீபத்தில் “தன்னை மிரட்டி திருமணம் செய்தார்” என கூறி அறிக்கை வெளியிட்ட பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்து, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா புதிய வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முன்னதாக, ஜாய் கிரிசில்டா தனது புகாரில் “மாதம்பட்டி ரங்கராஜ் திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார்” என்று மகளிர் ஆணையத்தில் மனு அளித்திருந்தார். அந்த வழக்கில் இருவரும் ஆஜராகி விசாரணை நடந்தது. விசாரணையின் போது, ரங்கராஜ் திருமணத்தை ஒப்புக்கொண்டதாக ஜாய் கூறியிருந்தார். ஆனால் பின்னர், “ஜாய் கிரிசில்டா என்னை மிரட்டி திருமணம் செய்தார்” என ரங்கராஜ் விளக்கம் அளித்தார்.
இதை எதிர்த்து ஜாய் கிரிசில்டா, “அவர் என்னை மிரட்டி திருமணம் செய்தார் என்றால், அவர் குழந்தையா? திருமணத்தை அவர் தானே ஒப்புக்கொண்டார். மேலும் டிஎன்ஏ டெஸ்ட் வேண்டாம் என அவரே கூறினார்” என்று பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், ஜாய் கிரிசில்டா தன் சமூக வலைதளத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் பேசியதாக கூறப்படும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் ரங்கராஜ்,
“ஹாய் பொண்டாட்டி… நீ எவ்வளவு அழகு தெரியுமா? லவ் யூ… சீக்கிரம் வர்றேன்… மிஸ் யூ…” என்று கூறுகிறார்.
வீடியோவுடன் இணைத்து ஜாய் கிரிசில்டா,
“இந்த வீடியோ மிரட்டலுக்காக அனுப்பியதா? இதை மக்கள் தாங்களே தீர்மானிக்கட்டும். என் ‘சோ-கால்டு’ கணவர் மாதம்பட்டி ரங்கராஜ் பயணத்தின் போது இதை அனுப்பினார்; அவர் தொலைவில் இருக்கும் போதும் இவ்வாறான வீடியோக்களை அனுப்புவது வழக்கம்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவால் சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதம் எழுந்துள்ளது.
