நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜைச் சுற்றி உருவான சர்ச்சை மேலும் தீவிரமாகி வரும் நிலையில், அவரது முதல் மனைவி ஸ்ருதி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
சமீபத்தில், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, “மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டார், பின்னர் கர்ப்பமான நிலையில் தனியே விட்டுவிட்டார்” என்று கூறி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், மகளிர் ஆணையத்திலும் புகார் அளித்திருந்தார்.
இதையடுத்து மகளிர் ஆணையம் ரங்கராஜை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. அவர் தனது மனைவி ஸ்ருதியுடன் ஆணையம் முன் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த விவகாரத்தின் போது ஜாய் கிரிசில்டா தொடர்ந்து ரங்கராஜ் தான் தனது கணவர் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுக் கொண்டிருந்தார். அந்தநேரத்தில் அமைதியாக இருந்த ஸ்ருதி, இப்போது தான் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ஸ்ருதி கூறியதாவது :

“சட்டப்படி மனைவியாக இருக்கும் ஒருவர் எவ்வளவு சிக்கலில் சிக்கினாலும், தங்களின் நிலையை விட்டுக் கொடுக்கக் கூடாது. நானும் என் குழந்தையும் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகிறோம். என்னை விமர்சிக்கும் அனைவரிடமும் மரியாதையுடன் பதிலளிக்கக் கற்றுக் கொடுத்தது எனக்கிருக்கும் அறிவு முதிர்ச்சிதான்.”
ஜாய் கிரிசில்டா அளித்த புகாரைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் கிளம்பியுள்ள நிலையில், மாதம்பட்டி ரங்கராஜின் மனைவி ஸ்ருதியின் இந்த பதிவு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

















