தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களான வடிவே ஃபஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மாரிசன்.
இயக்குநர் சுதிஷ் சங்கர் இயக்கத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா,பி.எல்.தேனப்பன். லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
கிராமிய பின்னணியிலான ட்ராவலிங் திரில் ஒராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தயாரித்திருக்கிறார்.
இம்மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் படம் ரிலிஸ் ஆக உள்ளது. படத்தின் முதல் பாடலான ஃபாஃபா பாடல், டிரெய்லருக்கும் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ‘மாரிசன்’ படத்தின் அடுத்த பாடலான மாரிசா பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியுள்ளார்.