விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட முருங்கப்பாளையத்தெரு, வழுதரெட்டி பகுதிகளில் வாக்காளர் சரிபார்ப்பு பணிகள் குறித்து பூத் கமிட்டி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் லட்சுமணன் கலந்துகொண்டு வாக்காளர் சரிபார்ப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்வது குறித்தும், விடுபட்ட வாக்காளர்களை பட்டியலில் சேர்ப்பது குறித்தும். இறந்து போன வாக்காளர்களை நீக்குவது குறித்து பூத் கமிட்டி முகவர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை விரைந்து மேற்கொள்வதுடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்த சாதனை திட்டங்களையும் மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றார். இதில் நகர செயலாளர் வெற்றிவேல், வக்கீல்கள் நடராஜன், லெனின்விஜய், வார்டு செயலாளர் ரகு, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் அசாருதீன், வார்டு பிரதிநிதிகள் நாகராஜ், ஓம்ஹரி உள்பட பலர் உடனிருந்தனர்.
