குத்தாலம் மன்மதீஸ்வரர் கோயில் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு
கோயிலுக்கு சொந்தமான இடம் என்று விளம்பர பலகை வைக்கப்பட்டது:-
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் மன்மதீஸ்வரர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான வணிக பிரிவு மனை 3,875 சதுரடி இடத்தினை கண்ணன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துவைத்திருப்பதாக மயிலாடுதுறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் கடந்த 2016ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.இதில் கண்ணன் இடத்தினை காலிசெய்ய இணைஆணையர் நீதிமன்றம் 2017ம் ஆண்டு உத்தரவுபிறப்பித்ததை எதிர்த்து கண்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2025ம் ஆண்டு விசாரணைக்கு வந்து மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனையடுத்து ஆக்கிரப்பு செய்து இனிப்பக கடை நடத்திவந்த அந்த இடத்தினை மயிலாடுதுறை அறநிலையத்துறை துணை ஆணையர் ரவிச்சந்திரன்,கோயில் செயல்அலுவலர் சங்கீதா மற்றும் குத்தாலம் காவல்துறையினர்,வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இடத்தில் இருந்த கடையை பூட்டி சீல் வைத்து இடத்தினை மீட்டு அறநிலையத்துறைக்கு சொந்தமான மன்மதீஸ்வரர் சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடம் என்று விளம்பர பலகை வைத்து சென்றனர்.இதனால் குத்தாலம் கடைவீதியில் பரபரப்பு ஏற்பட்டது
