மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா அரிவளூர் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ காளியம்மன் ஸ்ரீபாம்புலி அம்மன், ஸ்ரீ பிடாரியம்மன் ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ வீரன் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆகியோர் ஆலயங்கள் அமைந்துள்ளன. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயங்கள் சிதிலமடைந்த நிலையில் பொதுமக்கள் சார்பில் இவை மீண்டும் மறுக்கட்டுமானம் செய்யப்பட்டுள்ளது ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு கடந்த ஒன்றாம் தேதி யாகசாலை பூஜைகள் துவங்கின. யாகசாலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு யாகம் செய்யப்பட்டது. நான்கு கால யாகசாலை பூஜைகள் இன்று காலை நிறைவடைந்த நிலையில் மகா பூர்ணாகுதியும், தீபாராதனையும் செய்யப்பட்டது. தொடர்ந்து மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு கோபுர கலசங்களுக்கு ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். தொடர்ந்து கிராமத்தைச் சேர்ந்த இஸ்லாமிய பெருமக்கள் ஆலயத்திற்கு வந்திருந்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். இவர்களுக்கு ஆலய நிர்வாகக் கமிட்டி மற்றும் பொதுமக்கள் சார்பில் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக அட்வகேட் ஜெனரல் திரு ராமன், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

















