கர்நாடக மாநிலம் மங்களுர் அருகே கொல்லூர் என்னுமிடத்தில் ஸ்ரீ மூகாம்பிகை திருக்கோயில் அமைந்துள்ளது.
கொல்லூர் மூகாம்பிகை ஆலயமும் தமிழக ஆலய அமைப்புகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டு காணப்படுகிறது. இந்த ஆலயம் முழுவதும் கேரளா ஆலய கட்டுமான பாணியில் உள்ளது.
ஸ்ரீ மூகாம்பிகை கோவிலின் கோபுரவாயிலை 1996ம் ஆண்டு புனர் நிர்மானம் செய்து பழைய அமைப்பு மாறாமல் கருங்கற்களால் கட்டியுள்ளார்கள். இக்கோவிலின் கருவறை விமானம் முழுவதும் தங்கத் தட்டினால் வேயப்பட்டதாகும்.
எல்லா கோவில்களை போல முதலில் நம் கண்ணில் தென்படுவது கொடிக்கம்பம். அம்பாளின் கர்பக்கிரகம் கொடிக் கம்பத்தை ஒட்டியிருப்பது விளக்குத்தூண். ஒரே கல்லினால் ஆன அழகிய தூண் இது. இதில் ஆயிரம் விளக்குகள் ஏற்றலாம்.
இந்த திருக்கோயிலின் ஆண்கன் கருவறையில் சட்டை அணிந்து செல்லக்கூடாது. என்ற மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அன்னையின் கருவறைரூ எதிரில் பணிவுடன் அமர்ந்த நிலையில் அம்மனின் சிம்ம வாகனம். கருவறையின் இருபுறமும் தியான மண்டபம் உள்ளது. பக்தர்கள் அங்கு அமர்ந்து தியானம் செய்கிறார்கள். அன்னைக்கு முன்பாக ஸ்வர்ணரேகையுடன் கூடிய ஜோதிர்லிங்கம் உள்ளது. அன்னை பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் வேண்டும் வரம் அருள்கிறாள்.
முன்வாயிலைக் கடந்து மீண்டும் வெளிப்பிரகாரம் சுற்றினால் முதலில் சரஸ்வதி மண்டபம். இது மிகவும் விசே~மான இடம். ஆதி சங்கரர் ஸ்ரீமூகாம்பிகையை நோக்கி மனமுருகி சவுந்தர்ய லஹரியை இங்கு அமர்ந்து எழுதியதாகவும் இங்கே தான் அரங்கேற்றி அருளியதாகவும் கருத்துக்கள் நிலவுகின்றன.
இந்த சரஸ்வதி மண்டபம் கலா மண்டம் எனப்போற்றப்படுகிறது. அம்மன் சிவேலி முடிந்ததும் அம்பாளின் பஞ்சலோக விக்ரகத்தை இந்தச் சரஸ்வதி மண்டபத்தில் வைத்து வழிபாடு செய்வர். அந்த சமயங்களில் தான் இசை நடனம் என அரங்கேற்றங்கள் நடைபெறும்.

நவராத்திரி நாட்களில் இந்த சரஸ்வதி மண்டபம் தனி பொலிவு பெறும். விஜயதசமி அன்று இங்கு தங்கள் குழந்தைகளுக்கு அட்சராப்பியாசம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். அன்னையின் சன்னதிக்கு நேர் பின்புறம் அன்று ஆதிசங்கரர் தியானம் செய்ய அமர்ந்த இடம் இன்னும் சங்கரர் பீடம் என்று போற்றிப் பாதுகாக்கப்படுகிறது. நவராத்திரி சமயத்தில் ஆதிசங்கரரின் சிலைக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.
ஆலயத்தில் தனிச் சன்னதியில் முருகப்பெருமான் மேற்குப் பார்த்து அருள் பாலிக்கிறார். முருகன் சன்னதிக்கு அடுத்திருப்பது தான் சரஸ்வதி மண்டபம்.
மேற்கு கோபுரவாசல் அருகில் வடமேற்கு மூலையில் கிணறு உள்ளது. அதற்கு முன் ஆஞ்சநேயர் சன்னதி. இந்த தனிச்சன்னிதி வாயுதிசையில் அமைந்துள்ளது.
அதனை அடுத்து உள்ளது வி~;ணு சன்னதி, கேரள பக்தர்கள் இந்த வி~;ணுவை குருவாயூரப்பன் என்றே வணங்குகின்றனர்.
அப்படியே வடக்கு பிரகாரத்திற்கு சென்றால் கோவில் அலுவலகம் உள்ளது. வழிபாடு சீட்டுகள் தருமிடம், இலவச உணவு சாப்பிடும் இடத்துக்கு போகும் வழி உள்ளது.
வடகிழக்கு மூலையில் துளசிமாடம். அதனை அடுத்து அம்பாளின் பரிவார தேவதைக்கு எல்லாம் தளபதியான வீரபத்திரர் சன்னதி அமைந்துள்ளது. இவர் தானே கம்ஹாசூரன் சம்ஹாரத்தில் அம்பாளுக்குப் படைத்தளபதியாக நின்றவர். மேலும் ஆக்ரோ~ம் மிகுந்த வீரபத்திரரின் உக்கிரம் குறைக்கத்தான் அவருக்கு எதிரே ஆஞ்சநேயரைப் பிரதி~;டை செய்ததாக சொல்லுகிறார்கள். அதனால் தான் வீரபத்திரர் அமைதியாக இருக்கிறார் எனக் கூறுகிறார்கள்.
வீரபத்திரர் இந்த தலத்திற்கு ரட்சாதிகாரி, சிவேலி தவிர அன்னைக்குச் செய்யப்படும் அனைத்து பூஜைகளும் இவருக்கும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது…
ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் முன் ஜெகஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது.
கேரளாவில் காலடியில் பிறந்த ஆதிசங்கரருக்கு எத்தனையோ பகவதி கோவில்கள் இருந்தும் கலைவாணிக்கு ஒரு கோவில் இல்லையே என்ற
ஏக்கம் இருந்தது. அவர் மைசூர் சமுண்டீஸ்வரி தாயை நோக்கி தவம் இருந்தார். மகனின் தெய்வீக தாகத்தைத் தீர்க்க அன்னை ஆதிசங்கரருக்கு காட்சியளித்தாள்.
தேவியின் திவ்ய ரூபம் கண்டு ஆதிசங்கரருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. ஆனந்தக் கூத்தாடினார்.

தேவியோ, ”நீ எங்கு என்னை குடி வைக்க விரும்புகிறாயோ அங்கு கொண்டுபோ. ஆனால் ஒரு நிபந்தனை. நான் உன்னைப் பின் தொடர்வேன். நீ என்னை திரும்பி
பார்க்கக் கூடாது. அப்படி திரும்பிப் பார்த்தால் அந்த இடத்திலேயே நின்றுவிடுவேன்” என்றாள். ஆதிசங்கரர் தேவியின் நிபந்தனையை ஒத்துக் கொண்டு தேவியின் கொலுசு ஒலியைக் கேட்டபடி நிம்மதியாக நடந்து சென்றார்.
எப்பொழுதுமே தேவி சித்தாடல் புரிவது தானே இயற்கை. போகும் வழியில் கோல மகரிஷி வழிபட்டு வந்த சுயம்பு லிங்கத்தைப் பார்த்து நின்றுவிட்டாள்.
கொலுசு ஒலி கேட்டுக் கொண்டே முன்னே நடந்து சென்று கொண்டிருந்த ஆதிசங்கரர் கொலுசு ஒலி நின்றுவிட்டதே எனத் திரும்பிப் பார்க்கிறார்.
அன்னை அருள்வாக்குபடி நீ திரும்பி பார்த்தால் நான் அங்கேயே நின்றுவிடுவேன் என்ற வரிகள் நினைவுக்கு வந்தன.
எனவே அங்கு ஜோதிர் லிங்கத்தில் தேவி அந்த இடத்திலேயே ஐக்கியமாகிவிட்டாள். அவள் குடியேறிய இடம்தான் கொல்லூர் என்ற சக்தியின் புண்ணியத்தலம் ஆகும். அடர்ந்த காடு, மலை, ஆறுகள் அமைந்த இடத்தில் சுயம்புவான ஜோதிர்லிங்கம் மட்டும் தான் இருந்தது. அதிலே அரூபமான முப்பெரும் தேவியரும் உடனுறைகிறார்கள்.
ஆதிசங்கரர் வந்தபோது கோல மகரி~p பூஜித்து வந்த தங்க ரேகை மின்னும் சுயம்புலிங்கம் மட்டுமே இருந்தது.
அம்பாள் சிலை ஏதும் இல்லை. எனினும் அரூபரூபமாய் அந்த லிங்கத்தில் இருப்பதாக எத்தனையோ காலமாய் நம்பப்பட்டு வந்த ஸ்ரீமூகாம்பிகை தேவி என்ற அம்பாளின் முகம் அப்போது எப்படி இருக்கும் என்று யாரும் கற்பனை செய்து கூட அறியமுடியவில்லை.
மூகாம்பிகை தேவியின் புகழினையும், பெருமைகளையும், மகிமைகளையும் கூறும் பல நிகழ்ச்சிகளையும், கதைகளையும் பக்தியுடன் பேசிவந்த ஊர் மக்கள் மன்தில் இது ஒரு பெருங்குறையாக இருந்தது. இந்நிலையில் ஆதிசங்கரர் கொல்லூர் வந்திருப்பது ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
சக்தியை வழிபடும் சாக்தமார்க்கத்தை வழிபட அருளிய மகான் ஆதிசங்கரர் அரூபரூபமாய் உள்ள மூகாம்பிகையின் திரு உருவத்தைக் காட்டுவார் என ஊர்மக்கள் பரவசமடைந்தார்.
கொல்லூரில் ஆதிசங்கரர் தங்கியிருந்து தினமும் தியானம் செய்தது மூலவரின் சன்னதிக்கு நேர் பின்புறம் அமைந்துள்ள ஒரு மேடை ஆகும்.
ஏகாந்த வெளியில் ஜோதிர் லிங்கம் முன்னாள் அமர்ந்து ஆதிசங்கரர் தியானம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் முன் ஜெகஜோதியாக அம்பிகையின் உருவம் ஒளிர்ந்து காட்சி அளித்தது.
ஆதிசங்கரர் தரிசித்த அம்பிகையின் உருவத்தை மனதில் கண்டார். அவ்வுருவம் சங்கு சக்கரம் அபயக்கரம் ஏந்திய சாந்த சொரூபியாக பத்மாசனத்தில் அமர்ந்து அருட்கடாச்சம் தந்ததைக் கண்டார். அன்னை தானே இத்தனை காலமாக இந்த சொர்ணரேகை மின்னும் சுயம்பு லிங்கத்தில் அரூபரூபமாய் முப்பெருந்தேவி மூகாம்பிகா என அடையாளம் காட்டிக் கொண்டாள்.

ஆதிசங்கரர் மனம் மகிழ்ந்து அம்பாளை துதித்தார். அக்காட்சி அவர் இதயத்தில் தத்ரூபமாக பதிந்தது. உடனே இச்செய்தியை உரியவர்களிடம் கூறினார். விக்கிரகக் கலையில் விஸ்வகர்மா பரம்பரையில் கைதேர்ந்த ஸ்தபதி ஒருவரை அழைத்து விக்கிரகம் செய்ய ஏற்பாடு செய்தார்கள். மூலவரின் சிலையும் பஞ்சலோகத்தில் உருவானது. அம்மாளை பிரதி~;டை செய்வதற்காக தொடர்ந்து ஒருவருடம் உட்கார்ந்த நிலையிலேயே பூஜை செய்ததால் ஆதிசங்கரரால் எழ முடியவில்லை.
தவிக்கும் தன் பக்தனைப் பார்த்த அன்னை தன் கையாலேயே க~hயம் செய்து சங்கரருக்குக் கொடுத்தாள். இன்றும் இந்த தலத்தில் இரவு நேரத்தில் க~hயம் காய்ச்சி பக்தர்களுக்கு பிரசாதமாகக் கொடுக்கிறார்கள். தியானத்திலே கண்ட திவ்ய சொரூபம் ஆதிசங்கரர் கண் முன் நின்று காட்சியளித்துக் கொண்டிருந்தது. விக்கிரகத்தை பார்த்தார். பத்மாசன தோற்றம்-நான்கு கைகள், சங்கு சக்கரம், ஒரு கை அருளையும் ஒரு கை தன் மலர் பாதத்தை சரணடையத் தூண்டும் வகையிலும் இருந்தன.
சாந்த சொரூபியாக சகல கலைகளையும் ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குபவளாக காட்சி தந்தார். சுயம்பு லிங்கத்தின் பின்னால் சிறிது இடைவெளி விட்டு மூகாம்பிகா சிலையை பிரதி~;டை செய்தார். அதனடியில் சக்தி மிகுந்த ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதி~;டை செய்தார். அச்சக்கரத்தில் ஒன்பது சக்கரம் அடக்கம் அறுபத்து நான்கு கோடி தேவதைகளை ஆவாஹனம் செய்தார். ஸ்ரீசக்கரத்தின் மீது அன்னையின் விக்கிரக ரூபத்தை நிறுவினார்.
மூகாம்பிகை தனது இரு கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்திக் கொண்டு காட்சி அளிக்கிறாள். மேலும் இரண்டு கரங்களில் ஒரு கையில் அபயகரமும் மற்றொரு கையில் வரத கரம் தன் தாளை சுட்டிக்காட்டும் படி காட்டிக் கொண்டு பத்மாசனத்தில் அமர்ந்தபடி கருவறையில் வீற்றுள்ளாள். கருவறையின் விமானம் முழுவதும் கெட்டியான தங்கத்தால் வேயப்பட்டுள்ளது.
கருவறையில் அம்மையின் முன்னர் தரையோடு தரையாக சிவலிங்கம் உள்ளது. சுயம்பாகத் தோன்றிய அந்த சிவலிங்கம் பொற் கோடால் இரு பிளவுபட்டாற் போன்றும் இடப்பாகம் பெரிதாகவும் அமையப் பெற்றுள்ளார். துவாபரயுகத்தில் கோலமுனி தவம் புரிந்த பொழுது இத்தலம் தோன்றியது. உச்சிப் பொழுதின் போது கண்ணாடியின் மூலமாக இந்த லிங்கத்தின் மீது பிரதிபலிக்கச் செய்தால் அப்பொற்கோட்டைப் பார்க்கலாம்.

இடப்புறம் காளி, கலைமகள், அலைமகள் ஆகியோரை சுட்டுவதாக இந்த லிங்கம் அமைந்துள்ளது. வலப்புறம் அயன், அரன், அரி ஆகிய மூவரையும் சுட்டுவதாக அமைந்துள்ளது. இயக்கமில்லானும், இயக்கமே உருவாய் உடையாளும் இச் சிவலிங்கத்தில் ஒன்றி உள்ளனர். இவ்வாக்கியத்தின் ஆதாரமாக
அமைந்துள்ளதே இப்பொற்கோடு ஆகும்.
இன்று காணப்படும் திருவுருவம் ஆதி சங்கரரால் பஞ்சலோகத்தில் தனக்கு கிடைத்த காட்சிப்படி அமைக்கப் பெற்றதாகும். அதற்கு முன்னர் இங்குச் சிவலிங்கமும் ஸ்ரீசக்கரமும் மட்டுமே இருந்து வந்தன. அன்னையை வழிபட்ட பின்னர் அனைவரும் வீரபத்திர சுவாமியை தவறாது வழிபடுகின்றனர். அன்னை அவ்வப் பொழுது நவமணியால் அலங்கரிக்கப்படுகிறார். அவள் பொன் வண்ணத்தாள், செவ்வாடை விருப்பமுடையாள்.
இந்த திருக்கோயிவிலில் அம்மனுக்கு மார்பில், இடையில் மரகதம் பதித்த பொற்சரம் அலங்கரிக்கின்றது. பின் மகாகாளி கலைமகள், ஆகியோரின் உற்சவத் திருமேனிகளும் மூன்று முகமும் தசகரமும் பாம்பின் மீது கால் ஊன்றிய நிலையில் கணபதியின் திருவுருவம் உள்ளன. முதல் பிரகாரத்தில் பஞ்சமுக சுயம்பு கணபதி உள்ளார். இங்கு காணப்படும் ஸ்ரீசக்கரம் மும்மூர்த்திகளால் அமைக்கப்பெற்றது.
தொழிலில் வெற்றி பெற குங்கும அர்ச்சனை செய்கிறார்கள். நோய்களில் இருந்து விடுபட வடை நிவேதனம் செய்கிறார்கள். கல்வியில் சிறந்து விளங்க மகாதிருமதுர நிவேதனம் செய்கிறார்கள். இப்பிரசாதம் முன்பு யாரும் உட்கொள்ளாமல் கிணற்றில் வீசப்பட்டது. கருவறையில் வைத்து பூஜை செய்து தரப்படுவதை உட்கொண்டால் பல சிறப்புகள் அடையலாம்.
கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் இரவு 9 மணிக்கு கசாய தீர்த்தம் வழங்கப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் இஞ்சி, குரு மிளகு, ஏலக்காய்
திப்பிலி, இலவங்கம், வெல்லம் ஆகிய மருத்துவ மூலிகைப் பொருட்கள் சேர்க்கப்படுகிறது. நல்ல மருத்துவ குணம் கொண்ட இம்மூலிகை க~hயத்தை பக்தர்கள் வாங்கிக் குடிப்பதற்கு தவறுவதில்லை. இக்கசாயம் ஸ்ரீ ஆதிசங்கரர் அவர்கள் கூறிய முறைப்படி தயார் செய்யப்பட்டு இன்றளவும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இத்திருத்தலத்தி; தினமும் இரவு 7 மணிக்கு பிரதோச பூஜை கால காலமாக நடத்தப்படுகிறது. எல்லா விசே~மான பூஜைகளும் ஸ்ரீ வீரபத்திர சுவாமி திருச்சன்னதியிலும் நடைபெறுகிறது. அந்த நேரத்தில் உற்சவர் சிலை சரஸ்வதி மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டு மங்கள ஆரத்தியும், அ~;ட அவதான சேவையும் செய்யப்படுகிறது.
தாய் மூகாம்பிகைக்கு நெற்றி, கண்கள், மூக்கு, காது ஆகியவற்றில் விலை உயர்ந்த ரத்தினங்களால் செய்யப்பட்ட அணிகலன்கள் அணிவிக்கப்பட்டு வருகிறது.

அன்னையின் திருமார்பில் அணிவிக்கப்படும் பச்சைக்கல் அட்டிகை சுமார் 600 ஆண்டுகளுக்கு முன் கெதளி ராஜ வம்சத்தை சேர்ந்த அரசன் ஒருவன் தேவிக்கு காணிக்கையாக அளித்த ஒன்றாகும். இதன்விலை மதிப்பிட முடியாதது ஆகும். சுயம்பு லிங்கத்திற்கும் விசே~ பூஜை காலங்களில் அணிவிப்பதற்கு என்றே தனியாக அணிவிக்கப்படும் ஆபரணங்களும் உண்டு.
மூகாம்பிகை தேவியின் மூல விக்கிரகம் பக்கத்தில் சிறிய இரண்டு தேவிகளின் விக்கிரங்கள் உள்ளதைப் பார்க்கலாம். இதில் ஒரு தேவியின் திருவுருவத்தை தினத்திற்கு மூன்று வேளை அதாவது காலை, உச்சி, வேளை, இரவு ஆகிய மூன்று நேரங்களிலும் ஆலயத்தின் உள்ளேயுள்ள பிரகாரத்தைச் சுற்றி திருவுலா வருவது
வழக்கம். இதனை “சீவேலி” என்பார்கள்.
உட்பிரகாரத்தில் சீவேலி வருவது போன்று குறிப்பிட்ட விசே~ தினங்களில் அம்மன் ஆலயத்தைச் சுற்றியுள்ள முக்கிய தெருக்களில் நகர்வலம் வருவதும் உண்டு. அம்மன் சீவேலி வருவது கண்கொள்ளாக் காட்சி ஆகும். தேவியை தொட்டு அலங்காரம் செய்யவும் மூல கர்ப்பகிரக அறையைச் சுத்தம் செய்யவும் ஒரு குடும்பத்தினருக்கே பரம்பரை பரம்பரையாக உரிமை உள்ளது.
இவர்களே சீவேலி சமயத்திலும் தேவியை தொட்டு சுமந்து செல்ல உரிமைப் பெற்றவர்களும் ஆவார்கள். உட்பிரகாரத்தில் பலி பீடங்களுக்கு நைவேத்யம் படையலைத் தலைமை பூசாரி படைத்தவாறு அதற்குரிய பூஜைகளைச் செய்தவாறு செல்ல அதன் பின்னால் அம்மன் கொலுவிருக்கும் உட்பிரகாரத்திலேயே சீவேலி நடைபெறும்.
உட்பிரகாரத்தின் சீவேலி முடிந்ததும் வெளி பிரகாரத்தில் தேவியைத் தலையில் சுமந்தவாறு ஒரு முறையும் நீண்ட பல்லக்கில் ஒரு முறையும் பின்னர் வெள்ளி தகடு வேய்ந்த சிறிய பல்லக்கில் ஒரு முறையும் தேவி சீவேலியாக 3 தடவை வலம் வருவாள்.
காலை இரவு ஆகிய இரு நேரங்களில் மிக பெரிய மரத்தால் ஆன ரதத்தில் அம்மனை அமர்த்தி பக்தர்கள் வெளி பிரகாரத்தில் ஊர்வலமாக அழைத்து வருவார்கள். சீவேலி சமயத்தில் நகாரா என்ற இரட்டை சிறிய முரசும் நமது ஊரில் உள்ள நாகஸ்வரம் வகையை சார்ந்த சற்றே பெரிய செனாய் என்ற இசைக்கருவியும் வாசிக்கப்படும். உடன் ஒத்து என்ற ஸ்ருதி வாத்தியக் கருவியும் இசைக்கப்படும்.
பொதுவாக சக்தி தலங்களில் அகல் விளக்கு ஏற்றி பெண்கள் வழிபாடு செய்வார்கள். ஆனால் இங்கு குத்து விளக்கின் பஞ்சமுகத்திலும் திரிவைத்து நெய் விளக்கு ஏற்றி அம்பாளை வழிபடுவது நித்திய உற்சவம் வாரத்தில் வெள்ளி உற்சவம் பௌர்ணமி அமாவாசை நவராத்திரி, மார்ச் இறுதி ஏப்ரல் முதல் வாரத்தில் எட்டு நாள் ரதோற்சவம். ஜூன் முதல் வாரம் சுக்லபட்சம் அஷ்டமி திதியில் அம்பாளின் ஜனமாஷ்டமி திருவிழா நடைபெறும்.

கொல்லூர் மூகாம்பிகை ஆலயத்தில் மார்ச் மாதம் வசந்த விழா நடைபெறும். அப்பொழுது தேர் திருவிழா நடைபெறும். ஜூன், ஜூலை மாதங்களில் வளர்பிறை அஷ்டமி நாளில் அம்பிகையின் திரு அவதாரத் திருவிழா நடைபெறும். புரட்டாசி மாதம் நவராத்திரித் திருவிழா நடைபெறும்.
மகாலட்சுமி விரதம்.
மகா சிவராத்திரி, கிரு~;ணஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, சங்கர ஜெயந்தி ஆகிய நாட்களில் அம்பிகைக்கு சிறப்பான பூஜைகள் நடைபெறும்.
பங்குனி உத்திரத்தின் பொழுது மிகப்பெரிய விழாவான தேர் திருவிழா தொடங்குகிறது. அன்று கொடியேற்றுவிழா நடைபெற்று மூல நட்சத்திரத்தன்று தேர் திருவிழா முடிவடைகிறது.
அன்று ஆற்றங் கரையில் மக்களுக்கு விருந்து கொடுக்கப்படுகிறது. அன்னையின் விழாவிற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் மூகாசூரனுக்கு திருவிழா நடைபெறும். விழாகாலத்தில் சண்டிஹோமம் உருத்திராபிN~கம் சகஸ்ரநாம அர்ச்சனை முதலிய சிறப்பு பூஜைகள் நடைபெறும். எட்டாம்நாள் தேர் திருவிழாவின்போது தேரிலிருந்து நாணயம் உலோகத்துண்டுகள் வீசப்படும் அவை கிடைப்பது பெரும் பேறாக மக்கள் கருதுகின்றனர்.
ஒன்பதாம் நாள் ”ஒகுலி” என்று ஓர் விளையாட்டு நடைபெறும். கலைமகள் மண்டபத்திற்கு அருகில் உள்ள குளத்தில் நீர் நிறைத்து, வாழைப்பழக்குலையை ஓர் கம்பில் கட்டி தொங்கவிடுவார்கள். அதனை பிடிக்க முயலும் பொழுது வாழைக்குலையை எட்டிப்பிடிப்பவர் வெற்றி பெற்றவராகிறார். இவ்விளை யாட்டிற்கு பின்னர் அம்பிகையை ஆற்றில் நீராட்டி ஆலயத்திற்கு அழைத்து வருவார்கள். அத்துடன் இத்திருவிழா நிறைவு பெறும்.
நவராத்திரி காலத்தில் சிறுதேரில் அம்பிகை கோவிலின் கண் இருக்கும் சிறு பிரகாரத்தில் பவனி வருவாள். கார்த்திகை தீபத்தன்று அம்பிகையை ஆற்றில் நீராட்டி அழைத்து வந்த பிறகு விருந்து அளிப்பர். இதற்கு வனவிருந்து என்று பெயர். இத்தலத்தில் அன்னை மூகாம் பிகைக்கு நான்கு விழாக்கள் மிக சிறப்பாக நடைபெறுகின்றன. அவை: ஆனியில் அன்னையின் ஜெயந்தி விழா, ஆடியில் மகா வரலட்சுமி ஆராதனை விழா, புரட்டாசியில் 10 நாட்கள் நவராத்திரி விழா, மாசியில் மகா தேர்த்திருவிழா ஆகியவையாகும்.
இவ்விழா காலங்களில் பல மாநிலங்களில் இருந்தும் திரளான மக்கள் வந்து அன்னை மூகாம்பிகையின் விழா கோலத்தை கண்டு வணங்கி வாழ்வில் வளம் பெறுகின்றனர். அன்னை மூகாம்பிகையின் தேர்த்திருவிழா தொடங்கு வதற்கு ஒரு மாதத்திற்கு முன்னே, மூகாசுரனுக்கும் திருவிழா நடைபெறுகின்றது.