பாலிவுட் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் கியாரா அத்வானி. தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘கேம்சேஞ்சர்’ திரைப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது ஹிருத்திக் ரோஷனுடன் இணைந்து ‘வார் 2’ படத்தில் நடித்து வருகிறார்.
கியாரா அத்வானி, நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை காதலித்து, கடந்த 2023 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் பாரம்பரிய முறைப்படி விமரிசையாக திருமணம் செய்துகொண்டார். கடந்த பிப்ரவரி மாதம், தாய்மையை அடைந்துள்ளதாக கியாரா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், கியாராவுக்கு நேற்று மாலை பிரசவ வலி ஏற்பட்டதால் மும்பையின் ரிலையன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு சாதாரண பிரசவமாக அழகான பெண் குழந்தை பிறந்தது.
முதல்முறையாக பெற்றோர் ஆன சந்தோஷத்தில், சித்தார்த் மல்கோத்ரா மருத்துவமனை டாக்டர்களுக்கும் ஊழியர்களுக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தார்.
இந்த நற்செய்திக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.