கீர்த்தி சுரேஷ், மிஷ்கின் இணைந்து நடிக்கும் புதிய படம் அறிவிப்பு !

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த ஆண்டு தமிழில் சைரன், ரகு தாத்தா, இந்தியில் பேபி ஜான் போன்ற படங்களில் நடித்த அவர், இந்த ஆண்டு தெலுங்கில் உப்பு கப்புரம்பு படத்தின் மூலம் ரசிகர்களை சந்தித்தார். மேலும் ரிவால்வர் ரீட்டா, கண்ணிவெடி உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.

கடந்த டிசம்பரில் தனது காதலர் ஆண்டனியை திருமணம் செய்து கொண்ட கீர்த்தி சுரேஷ், சிறிது இடைவெளிக்குப் பிறகு தற்போது கோர்ட் ரூம் ட்ராமா படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் அவருடன் இயக்குனர்-நடிகர் மிஷ்கின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஹார்ட்பீட் சாருகேஷ், பாலசரவணன், பாலாஜி சக்திவேல், ஆர்.சுந்தர்ராஜன், மாலா பார்வதி, தீபா, ஏ.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன் உள்ளிட்ட பலரும் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி. எஸ் இசையமைக்கிறார். அறிமுக இயக்குனர் பிரவீன் எஸ் விஜய் இப்படத்தை இயக்குகிறார்.

Zee Studios மற்றும் Drumsticks Productions சார்பில், வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை சமீபத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. சென்னை மற்றும் கோயம்புத்தூரில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது.

இப்படத்தின் தலைப்பு மற்றும் பிற தகவல்கள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தயாரிப்புக் குழு தெரிவித்துள்ளது.

Exit mobile version