சிவகங்கை செல்வதற்காக சென்னையிலிருந்து இன்று விமான மூலம் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி கார்த்திக் சிதம்பரம் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில்:
இந்தியா கூட்டணி வலுவாக உள்ளது. நம்பிக்கையோடு தேர்தலை சந்திக்கிறோம் இந்த முறை வெற்றி எங்களுக்கு நிச்சயமாக வரும் என்று நம்பிக்கை உள்ளது. ஆனால் தேர்தல் கமிஷன் பல வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி இருக்கிறார்கள் நேற்று உச்ச நீதிமன்றம் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் ஒவ்வொரு மாவட்டங்களில் பெயர் நீக்கப்பட்டிருந்தால் சேர்க்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள் எங்களுக்கு தேர்தல் கமிஷன் நடத்தைகள் மீது பல சந்தேகங்கள்,கேள்விகள் உள்ளன அதையெல்லாம் தேர்தல் வருவதற்கு முன் அவர்கள் தீர்ப்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
கருத்துக்கணிப்புகளை வைத்து தேர்தல் முடிவுகளை கணித்து விடலாம் என்றால் தேர்தலே நடத்த வேண்டாம் நிதீஷ்குமார் உடல்நிலை சரியில்லை என்று எல்லோருக்கும் தெரியும். அவர் தொடர்ந்து அரசாங்கத்தை நடத்த முடியுமா என்பதை ஒரு கேள்விக்குறி ஆனால் எங்கள் கூட்டணியில் தேஜஸ்ஸ்ரீ யாதவ் ஒரு இளையவர் திறமையானவர் அவரை முன்னிறுத்தி இந்த தேர்தலை காங்கிரஸ் கட்சியும் மற்ற கட்சிகளும் தேர்தலை சந்திக்கும் என்று நம்புகிறோம்.
தேஜஸ் ஸ்ரீ வீட்டுக்கு ஒருவருக்கு வேலைவாய்ப்பு என்று வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார் அது பற்றி எனக்கு தெரியவில்லை அதை நான் பார்க்கவில்லை அதனால் அதைப் பற்றி என்னால் சொல்ல முடியாது என்றார்.
எடப்பாடி பிரச்சாரத்தில் டிவிகே கொடி குறித்த கேள்விக்கு:
கூட்டணி அமையட்டும் அதைப்பற்றி பேசுவோம் கொடி பறந்த உடன் கூட்டணி அமைஞ்சிருச்சு என்று எப்படி சொல்லுவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கட்டும் அதன்பின் சொல்கிறேன்.
சொந்த கட்சி நிர்வாகிகளே கொடி பிடிப்பதாக கருத்து குறித்த கேள்விக்கு:
இதெல்லாம் சீரியஸ் ஆக எடுத்துக் கொள்ளக் கூடாது நல்லவேளை சொந்த கட்சிக்காரர்களை வைத்து கொடியசைக்க செய்தார் ஏ ஐ மூலம் செய்யவில்லை என்று சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளி மரணம் குறித்த கேள்விக்கு:
தமிழ்நாடு காவல்துறையின் நடைத்தை மீது வருத்தம் அளிக்கிறது. நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளது அதில் ஒரு முடிவுக்கு வரவில்லை நேற்று கூட உச்ச நீதிமன்றத்தில் 2017ல் நடந்த சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்துள்ளனர். போலீசாரில் நடத்தை மீது பல கேள்விகளை கேட்டுள்ளனர் என்னை பொருத்தவரை என்கவுண்டர்,லாக்கப் மரணம், குற்றங்களை எல்லாம் நிரூபிக்காமல் இருப்பது ஒட்டுமொத்த காவல்துறைக்கும் சீர்திருத்தம் வேண்டி முதலமைச்சர் ஒரு குழுவை அமைக்க வேண்டும் கான்ஸ்டபிள் முதல் டிஜிபி வரை எல்லோரையும் ரீ கிரியேட் பண்ண வேண்டும்.
திருமாவளவனுக்கு z பாதுகாப்பு வழங்க தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கேள்விக்கு:
Z, Z+ எல்லாம் மத்திய அரசு கொடுக்க வேண்டும் அவருக்கு ஏதாவது அச்சம் இருந்தால் மத்திய அரசிடம் எழுதி வாங்க வேண்டும் மாநில அரசு ஒன்றும் செய்ய முடியாது.
விசிகாவினர் விஜய்க்கு கொடுக்கும் பாதுகாப்பு ஏன் திருமாவளவனுக்கு கொடுக்கவில்லை என கேள்வி எழுப்புகிறார்கள்:
யாருக்கு மிரட்டல் இருக்கிறது என்று உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்து ஹோம் மினிஸ்டர் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவார்கள் கேட்டு வாங்கும் விஷயம் கிடையாது திருமாவளவன் கேட்டிருக்கிறாரா? மிரட்டல் அதற்கான ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பித்து உள்துறை அமைச்சரிடம் எழுதிக் கொடுத்து வாங்க வேண்டும்.
பாவக்கா பொதுச் செயலாளர் ஆனந்த் தலைமறைவாகி பத்து நாட்கள் கடந்து விட்டது இன்னும் காவல்துறை அவரை கைது செய்யவில்லை குறித்த கேள்விக்கு:
ஒரு பொலிட்டிக்கல் பார்ட்டி இந்த மாதிரி விஷயங்களை ஃபேஸ் பண்ண வேண்டும் பேஸ் பண்ணாமல் தலைமறைவாக இருப்பது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது என்றார்.