டிஜிட்டலில் அரஸ்ட் செய்ய முடியாது நேரடியாக உங்களை கைது செய்தால் உங்கள் உறவினருக்கோ நண்பருக்கோ நாங்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் டிஜிட்டல் கைதில் யாரும் ஏமாற வேண்டாம் எஸ்.பி. அறிவுறுத்தல்
கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆட்டோக்களில் க்யூ ஆர் கோடு ஒட்டுவதற்கான திட்டம் கொண்டு வரப்பட்டது இதை மொபைல் போன் மூலம் ஸ்கேன் செய்தால் எஸ்பி நம்பர், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் ஸ்டேஷன் நம்பர்கள், ஆஸ்பத்திரி நம்பர், ஆம்புலன்ஸ் நம்பர் என அனைத்து விபரங்களும் தெரியவரும்.
மார்த்தாண்டத்தில் ஆட்டோக்களுக்கு கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டும் அறிமுக விழாவிற்கு மாவட்ட எஸ்.பி ஸ்டாலின்

ஒரு ஊர் அமைதியாக வளர்ச்சி பெற வேண்டும் என்றால் அந்த ஊரின் பாதுகாப்பு மிக முக்கியமாகும். அந்தப் பாதுகாப்பை என்னென்ன விதத்தில் உறுதிப்படுத்த வேண்டும் என யோசிக்கும் போது தான் க்யூ ஆர் கோடு அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது .
ஆட்டோ டிரைவருக்கும், போலீஸ் துறைக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது. எங்களுடைய சீருடையும், உங்களுடைய சீருடையும் ஒரே நிறம். காக்கும் பொறுப்பு காக்கி நிறத்துக்கு உள்ளது.
பெண்கள், குழந்தைகள், முதியோர் பாதுகாக்கும் பொறுப்பு எல்லோருக்கும் உள்ளது. அது போலீஸ் துறைக்கு மட்டுமல்ல சமூகத்துக்கும் உள்ளது. சமூகத்தில் உள்ள ஒவ்வொரு அங்கத்தினருக்கும் மிகப்பெரிய
பொறுப்பு உள்ளது.
ஒரு ஊருக்கு யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் அவர்கள் சந்தேகத்திற்குரிய நபரா என்பது உங்களுக்கு தெளிவாக தெரியும். நீங்கள் காலம் காலமாக ஆட்டோ ஓட்டுவதால் கூர்ந்து கவனிப்பீர்கள்.
உங்கள் மூலமாக இந்த சமூகத்தில் நடக்கும் குற்றங்களையும் தடுக்க விரும்புகிறோம். குற்றங்கள் வருவதற்கு முன்பாகவே அதை தடுப்பதற்காக இந்தத் திட்டத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக அறிமுகப்படுத்துகிறோம்.
க்யூ ஆர் கோடை செல்போன் மூலம் ஸ்கேன் செய்தால் சிங்கிள் பாயிண்ட் காண்டாக்ட் எல்லா விவரங்களும் வந்துவிடும்
நிறைய பேர் பஸ் ஸ்டாண்டிலோ, ரயில்வே ஸ்டேஷனிலோ செல்போனை தொலைத்து விடுகிறார்கள் என்ன பண்ணனும், ஏது பண்ணனும் என்று அவர்களுக்கு தெரியாது.
ஒரு மொபைல் போன் காணாமல் போனால் சி இ ஐ ஆர் என்ற போர்டல் உள்ளது. அதில் போய் நம்முடைய மொபைல் நம்பரும் நம்முடைய ஐ எம் ஐ நம்பரும் போட வேண்டும். அப்பொழுது மொபைல் போன் பிளாக்காகி விடும். அதன் பிறகு அந்த மொபைல் போனையோ, சிம் கார்டையோ யாரும் பயன்படுத்த முடியாது .அதன் பிறகு மொபைல் நம்பரை வைத்து சி இ ஐ ஆர் மூலம் அந்த செல்போன் எங்கு உள்ளது என கண்டுபிடிககாலாம்.
ஒரு காலத்தில் ஆடு, மாடு திருட்டு இருந்தது. தற்போது டிஜிட்டல் அரஸ்ட் என்ற புதிய திருட்டு வந்துள்ளது. ஒருவன் எங்கேயோ இருந்து கொண்டு நீங்கள் போதைப் பொருள் கடத்தியிருப்பதாக கூறி டிஜிட்டல் அரஸ்ட் செய்ததாக சில போலி ஆவணங்களை காண்பிக்கின்றனர். வீடியோ கால் மூலம் யூனிபார்ம் போட்ட போலீசார் வருகின்றனர். சுப்ரீம் கோர்ட் ஆர்டர் இருப்பதாக போலியான ஆவணங்களை காண்பிப்பார்கள். பதட்டத்தில் அவர்கள் ரிலீஸ் பண்ண குறிப்பிட்ட தொகையை கேட்பார்கள்.
இது போன்ற விஷயங்கள் நடக்காமல் இருப்பதற்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும். யாரையுமே டிஜிட்டலில் அரஸ்ட் செய்ய முடியாது. நேரடியாக உங்களை கைது செய்தால் உங்கள் உறவினருக்கோ | நண்பருக்கோ நாங்கள் தகவல் தெரிவிக்க வேண்டும்.
நாளுக்கு நாள் குற்றங்கள் உடைய பரிணாமம் வளர்ச்சி அடைந்து கொண்டே செல்கிறது அந்த விழிப்புணர்வுக்கு தான் இந்த க்யூ ஆர் கோடை அறிமுகப்படுத்தி உள்ளோம்