கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சரும், பாஜக தலைவருமான எடியூரப்பா “கமல் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து எடியூரப்பா, “கன்னடர்களின் உணர்வுகளை புண்படுத்திய கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மொழியியல் நிபுணராக இல்லாத கமல் கன்னட மொழி குறித்து பேசியது வருந்தத்தக்கது. மன்னிப்பு கேட்பதால் சிறியவராகவோ, ஆணவத்தால் பெரியவராகவோ ஆவதில்லை. நல்லிணக்கத்தை தேவையின்றி சீர்குலைப்பது சரியல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
















