புதுக்கோட்டை மாவட்டம் நெடுங்குடி அருகில் அமைந்துள்ளது கைலாசநாதர் திருக்கோயில். இத்தலம் தென்கயிலை என்று புராண பெயர் பெற்றது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இப்பகுதி அடர்ந்த வில்வ மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அசுர குலத்தைச் சோர்ந்த பெருஞ்சீவி என்பவரின் ஆளுகைக்குட்பட்டது.
சிவ பக்தனான பெருஞ்சீவி பெற வேண்டித் தினசரி காசியிலிருந்து ஒரு சிவலிங்கத்தைக் கொண்டு வந்து 47 நாட்கள் பூஜை செய்து, 48-ஆம் நாள் கயிலாயமலையில் இருந்து ஒரு சிவலிங்கத்தை கொண்டு வந்து பூஜையை நிறைவு செய்ய முடிவெடுத்தான். அதற்காக 400 அடி உயரத்தில் ஒரு மண் மலையை உருவாக்கி, அந்த சிவலிங்க பூஜையை தினசரி செய்து அதற்குப் பிறகு மற்ற கடமைகளில் ஈடுபட முடிவு செய்தான்.
அவன் சகோதரன் சிரஞ்சீவி அண்ணணுக்கு உதவியாக ஆகாய மார்க்கமாக காசியிலிருந்து சிவலிங்கத்தை கொண்டு வந்தது கொடுத்தான். பெருஞ்சீவி, அவன் முடிவு செய்தபடி மண்மலை மீது அந்த சிவலிங்கத்தை வைத்து பூஜை செய்தான். பூஜை முடிந்தவுடன் அந்த சிவலிங்கம் மறைந்து விடும். பெருஞ்சீவியின் மற்ற கடமைகள் தொடரும்.
இவ்வாறாக பெருஞ்சீவி, 47 நாட்கள் பூஜையை நினைத்தபடி நடத்தி முடித்தான். நாளையோடு பூஜை முடிகிறது என்ற சமயத்தில் கயிலைநாதன் இருவரின் பக்தியை சோதிக்க திருவுள்ளம் கொண்டார்.
தம்பி சிரஞ்சீவி சிவலிங்கம் கொண்டு வருவதை தாமதப்படுத்தினார். 48-ஆம் நாள் சிவலிங்கத்தை எடுத்து வர கயிலை மலைக்கு சென்ற சிரஞ்சீவி உரிய நேரத்தில் வந்து சேரவில்லை. நேரம் தவறினால் பலன் கிடைக்காது என்பதால் தம்பி வந்து சேராததால் பெருஞ்சீவி அந்த மண்மலையிலிருந்து மண்ணை எடுத்து கயிலை நாதனை மனதில் நினைத்து கையால் சிவலிங்கத்தை உருவாக்கினான் அதை மலை மீது பூஜை நடத்தினான்.
அதற்கு கைலாசநாதர் என்று பெயரிட்டு அந்த மலைமீது ஆலையத்தையும், அருகில் ஒரு குளத்தையும் உண்டாக்கினான். அதற்கு சர்ப்ப தீர்த்தம் என்று பெயரிட்டான். கயிலைக்குச் சென்ற தம்பி சிரஞ்சீவி சிலிங்கத்துடன் தாமதமாக வந்தான். அண்ணன் கயிலை நாதனை உருவாக்கி பூஜை முடித்ததையறிந்து மனம் வருந்தித் தான் கொண்டு வந்த சிவலிங்கத்தை வைத்து மீண்டும் பூஜை செய்யச் சொன்னான்.

பெருஞ்சீவி மறுத்ததால் ஆத்திரமடைந்து அண்ணன் உருவாக்கிய குன்றையும், கோவிலையும் அழிக்கும் எண்ணத்துடன் கயிலைநாதனை நோக்கி தவமிருந்தான்.
கயிலை நாதனும் இவ்விருவரின் முன்பாக தோன்றி, சிவலிங்கம் கொண்டு வர தாமதப்படுத்தினாலும், குறிப்பிட்ட நேரத்தில் பூஜையை முடித்த உறுதி என்னை மகிழ்வடையச் செய்கிறது.
அதே சமயம் இதனால் ஏற்பட்ட போட்டி பொறாமையோடு அழிக்கும் எண்ணம் மேலோங்குதல் பக்தியை குன்றச் செய்யும் செயலாகும்.
எனவே இருவரும் சமாதனமடைந்து பெருஞ்சீவி பூஜித்த சிலிங்கத்திற்கு அருகில் சிறுஞ்சீவி கொணர்ந்த சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஒற்றுமையுடன் பூஜித்து பின் என்னிடம் வருக எனக்கூறி மறைந்தார்.
அசுரர்கள் காலம் முடிந்து ஆண்டுகள் பல கடந்து காடுகள் மறைந்து கிராமங்கள் தோன்றின. பெருஞ்சீவி உருவாக்கிய குன்றும் குளமும் கோவிலும் நிலைத்திருந்தன. அப்பகுதி மக்கள் அவரை வணங்கி வந்தனர். அவ்வழியாகச் செல்லும் பால்காரர்கள் தாங்கள் கொண்டு செல்லும் பாலை விற்பனை செய்து திரும்பும் போது மீதி
பால் இருந்தால் கைலாசநாதருக்கு அபிN~கம் செய்துவிட்டு போவார்கள்.
மறுநாள் அவர்கள் மீண்டும் அங்கு வரும்போது அவர்கள் பாலுக்குரிய காசு கோவில் படியில் இருக்கும் இதனால் இவரை படிக்காசுநாதர் என்றும் பெயரிட்டு அழைத்தனர்.

திருப்பெறுந்துறையில் மாணிக்கவாசகர் கட்டிய ஆத்மநாதசுவாமி ஆலயத்தை விரிவுபடுத்தித் திருப்பணி செய்த பாண்டிய மன்னன் தன் பரிவாரங்களுடன் இந்த வழியாக திரும்பி மதுரைக்குச் சென்றபோது இந்த குன்றையும் கோவிலையும் பார்த்து வியந்தான். இப்பகுதி மக்களிடம் கேட்டபோது இத்தல வரலாற்றையறிந்து இதையும் திருப்பணி செய்து விரிவுபடுத்தத் திட்டமிட்டபோது சுவாமி சன்னதிக்கு அருகில் ஒரு ஒளி வட்டம் தோன்றி அருகில் அம்மன் சன்னதியை அமைக்கும்படியும், அதற்குப் பிரன்னநாயகி என்று பெயர் சூட்டும் படியும் அசரீரி எழுந்தது.
மாங்கல்ய தோ~ம் உள்ள பெண்கள் பெற்றோருடன் வந்து இதை செய்தால் திருமணம் உடனே நடக்கும். மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்த சன்னதி முன்னால் மண்டபத்தின் உச்சியில் அமைக்கப்பட்ட 12 ராசி சக்கரத்தின் நேர்கீழே தரையில் பதிக்கப்பட்ட பத்ம பீடத்தில் அமர்ந்து, ஓம் நமச்சிவாயா என்ற மத்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். ஒருநாள் தங்கி இதேபோல் செய்தால் மனநிலை தெளிவாகும், சகஜநிலை ஏற்படும். தீராத மனக்கவலையும் தாங்க முடியாத பிரச்சனையும் உள்ளவர்கள் ஒருநாள் தங்கி இருந்து இதைச் செய்தால் தெளிவு பிறக்கும் மனக் கவலை தீரும்.
இந்திய துணைக்கட்ணத்திலேயே வேறு எந்த ஆலயத்திற்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு இங்கு உண்டு அது இதுதான். மதுப்பழக்க்ததிற்கு அடிமையாகி அதிலிருந்து விடுதலைபெற வேண்டும் என்றால் இங்கு வரவேண்டும்.
புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும். தை பொங்கல் சிறப்பாக நடைபெறும். மாசி மாதம் மகா சிவராத்திரி விழா நடைபெறும்.