பிரபல நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளின் தந்தையாக இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ், மனைவி ஸ்ருதியிடம் இருந்து பிரிய முயற்சி செய்து, ஜாய் கிரிஸில்டாவுடன் உறவு வைத்திருந்ததாக கடந்த சில மாதங்களாகவே கிசுகிசுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, சில வாரங்களுக்கு முன் திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, தாம் ரங்கராஜுடன் திருமணம் செய்து ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக ஜாய் கிரிஸில்டா பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜாய் கிரிஸில்டா,
“மாதம்பட்டி ரங்கராஜ் என்னுடைய கணவர். நாங்கள் 1.5 ஆண்டுகளாக திருமணம் செய்து ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தோம். ஆனால் அவர் தற்போது என்னை விட்டு விலகி விட்டார். என் குழந்தைக்கு அவர் தான் அப்பா. எனக்கு மற்றும் என் குழந்தைக்கு நீதி வேண்டும்.
MRC நகரிலுள்ள திரிவேதியம்மன் கோவிலில் எங்கள் திருமணம் நடைபெற்றது. சில தினங்களுக்கு முன் அவரை ஒரு நட்சத்திர விடுதியில் சந்தித்தபோது, அவர் என்னை பலர் முன்னிலையில் தாக்கினார். ஸ்டார் ஹோட்டல், தனியார் தொலைக்காட்சி ஷூட்டிங் ஸ்பாட் உள்ளிட்ட இடங்களிலும் அவர் என்னை தாக்கியுள்ளார்.
‘குழந்தை வேண்டாம், நீ மட்டும் போதும்’ எனவும் கூறியுள்ளார். ரங்கராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என அவர் வலியுறுத்தினார்.
இந்த புகாரைத் தொடர்ந்து, சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
