புதிய முயற்சியாக உருவான ‘ப்ளாக்’ திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. ஜீவா நடித்த இந்த சஸ்பென்ஸ் டைம்-லூப் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்கியவர் கே.ஜி. பாலசுப்பிரமணி, பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். சாம்.சி.எஸ் இசை அமைத்திருந்தார்.
இப்போது, ‘ப்ளாக்’ இயக்குநர் கே.ஜி. பாலசுப்பிரமணி இயக்கும் புதிய படத்திலும் ஜீவா நடித்துக் கொண்டிருக்கிறார். ‘ஜீவா 46’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் பூஜை விழா இன்று நடைபெற்றது.
விழாவில் நடிகர் விஷால் மற்றும் ஜீவாவின் தந்தை தயாரிப்பாளர் ஆர்.பி. சௌதரி கலந்து கொண்டனர். இந்தப் புதிய திரைப்படத்தில் பப்லூ ப்ருதிவிராஜ் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டுள்ளார்.
‘ராவண கோட்டம்’ திரைப்படத்தை தயாரித்த கண்ணன் ரவி இந்தப் புதிய படத்தையும் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளராக கோகுல் பினாய் மற்றும் படத்தொகுப்பாளராக சதீஷ் குமார் பணியாற்றுகின்றனர்.
படத்தின் தலைப்பு மற்றும் மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.