திருச்சியில் தவெக தலைவர் விஜய் இன்று தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதனை முன்னிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொ. திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். திருமாவளவன் கூறியதாவது, “இப்போதுதான் விஜயின் களப் பணிகள் தீவிரமடைகிறது. விஜயின் பிரச்சாரம் சமூகத்தில் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்துமென பலர் கேள்வி எழுப்புகிறார்கள்.”
கோவை மாவட்டம், ராமநாதபுரத்தை அடுத்த சுங்கம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் சென்ரல் பாங்க் ஆப் இந்தியா எஸ்சி, எஸ்டி ஊழியர்கள் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருமாவளவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியது குறிப்பிடத்தக்கது.
அவர் கூறியது, மனிதர்கள் பெயர், இனம், சாதி, பாலினம் போன்ற காரணங்களால் வன்முறைகளுக்கு உட்படுகிறார்கள். இதைத் தாண்டி, அனைத்து உயிர்களையும் நேசிக்க வேண்டும் என்பதே கௌதம புத்தரின் போதனை என அவர் குறிப்பிட்டார். மேலும், புத்தரின் சிலைகள் சேதப்படுத்தப்படுவதும், அவரது போதனைகளுக்கு எதிரான வெறுப்பு இன்னும் நிலவுவதும் அதற்கான அடையாளங்கள் என விளக்கினார்.
திருமாவளவன், வெறுப்பு அரசியல் தவிர்க்கப்பட வேண்டும்; மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்கு அன்பு தான் முக்கியம் எனக் குறிப்பிட்டு, பிரச்சாரத்தின் போது கூட சகிப்புத் தன்மையை மனதில் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
விஜய் தொடர்பான கேள்விக்கு, திருமாவளவன், “இப்போதுதான் விஜயின் பிரச்சாரக் களப் பணிகள் தீவிரமடைகிறது. இதனால் அவர் கணிசமான வாக்குகள் பெறலாம். ஆனால் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது” என்று உறுதிபடுத்தினார்.
மேலும், எதிர்க்கட்சிகள் தனியாக களத்தில் இறங்குவார்கள், கூட்டணி அமைப்புக்கு வாய்ப்பு இல்லை எனவும், அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரன் தொடர்பான அணிச் செயல்பாடுகள் தனி கட்சிகள் மட்டுமே நடப்பதாகவும் தெரிவித்தார்.