விஜய் வந்தால் எங்களுக்கு ஓகே தான் – நயினார் நாகேந்திரன்

ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்பு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பு.

தமிழக வெற்றி கழகம் அதிமுக கூட்டணி இணைந்த பின்னர் பிஜேபியை அதிமுக கழட்டி விடுவார்கள் என டிடிவி தினகரன் கூறிய கருத்திற்கு

ஒவ்வொருவரின் சொந்த கருத்திற்கு பதில் சொல்ல முடியாது -அவர் மீது என்ன வெறுப்பு என எனக்கு தெரியாது என் என் மீதும் சிலவெறுப்புகளை தெரிவித்தார்.தற்போது அது இல்லை, தனது சொந்த பிரச்சினைகளுக்காக கட்சிகளைப் பற்றி பேசுவது சரியாக இருக்காது என்பது என்னுடைய கருத்து.

ஒரு நபர் கமிஷன் மீது குறை சொல்லக்கூடாது -தூத்துக்குடி விவகாரம் குறித்து கமிஷன் அமைத்தார்கள் -அதில் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என யாருக்கும் தெரியாது. அஸ்ரா கார்க் நடவடிக்கைகள் குறித்து, தற்போது தான் அவர் பொறுப்பெடுத்து கொண்டுள்ளார் அவர் விசாரணைக்கு பின்பே தெரிய வரும்.

வழக்கறிஞரை தாக்கிய விவகாரம் ஆர் எஸ் எஸ் பிஜேபி தான் காரணம் என திருமாவளவன் கூறிய கருத்திற்கு; வழக்கறிஞரை திருமாவளவன் ஆட்கள்தான் அடித்துள்ளனர் இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் என சொல்வது எந்த விதத்தில் நியாயம் -இது எந்த விதத்தில் பொருந்தும். ஆர் எஸ் எஸ் பிஜேபி காரணம் என்னும் சொல்லும் திருமாவளவன் உங்கள் கூட்டணிக்கு வந்து விடலாமே.

பிஜேபி கூட்டணியில் தவெக வருவதற்கு வாய்ப்பு உள்ளதா?

பிஜேபி கூட்டணியில் யார் வேண்டுமானாலும் வரலாம். வரும் அனைவரையும் அனைத்து கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் -ஜனவரி மாதத்திற்கு பின்னரே கூட்டணி முடிவுக்கு வரும். தவெக அதிமுக கூட்டணி என்பது போல வதந்தி பரப்புகிறார்கள் என திருமாவளவன் கருத்திற்கு, தற்போது தமிழ்நாட்டில் ஒரு வதந்தி பரவி வருகிறது தங்கள் கூட்டணி வலுவாக உள்ளதாகவும் மீண்டும் ஆட்சி பிடிப்போம் எனவும் வதந்தி பரப்புகிறார்கள் ஆனால் ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் எனவும் தெரிவித்தார்.

Exit mobile version