கொள்ளையடிப்பதற்காகவே மயிலாடுதுறை பாதாள சாக்கடை புதிய திட்டமா? என்றும் மக்களை ஏமாற்றுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளதாக ஆளும் திமுக ஆண்ட அதிமுக அரசுகளை கடுமையாக சாடிய டாக்டர்.மாயாஜி மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் செல்வம் சதுக்கத்தில் திராவிட மக்கள் மசோதா கட்சியின் பூம்புகார் சட்டமன்ற தொகுதியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆர்.கே.வி. ரூபன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் டாக்டர்.மாயா வெங்கடேசன் சிறப்புரையாற்றினார். மயிலாடுதுறை நகர எல்லைக்குள் நுழைந்தாலே மூக்கை துளைக்கும் பாதாள சாக்கடை தான் மிக முக்கிய அவலமாக உள்ளது. வீதியெங்கும் வழிந்தோடும் கழிவு நீரால் மக்கள் படும் வேதனை சொல்லி மாளாது. கடந்த 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலமாக மத்திய அரசு 20 கோடி,மாநில அரசு 15 கோடி,பொதுமக்கள் தரப்பில் 7 கோடி என 42 கோடியில் பெரும் ஊழலுடன் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தால் நகரவாசிகள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராம மக்களும் நிம்மதி இழந்து,சுகாதாரம் இழந்து ,நல்ல காற்றை இழந்து, தொற்றுநோய் பாதிப்போடும்,அபாயத்தோடும் காலத்தை கடத்துகின்றனர். தரமற்ற குழாய்களை கொண்டு தரமின்றி செய்த பணிகளால் ஓரிரு ஆண்டுகளிலேயே நகர சாலைகள் உள்வாங்க தொடங்கி இதுவரை பல நூறு முறைக்கும் மேல் சாலைகள் எல்லாம் வாய்பிளந்து ராட்சச பள்ளங்களை ஏற்படுத்தி மக்களை ஒரு வழிசெய்து வருகிறது. 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாதாள சாக்கடை குழாய்கள் உடைந்து ஆபத்தான பள்ளங்கள் ஏற்பட்டு சாக்கடை நீர் எங்கு பார்த்தாலும் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் நிம்மதியாய் வாழ தகுதியற்ற ஊர்களில் ஒன்றாக மயிலாடுதுறை மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் பாதாள சாக்கடை கழிவுகள் வழிந்தோடும் சாலைகள்,வீதியோரங்களில் குப்பைமேடுகள், நகரை கடந்துச்செல்லும் வரை கட்டாயம் மூக்கைப்பொத்திக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் என சுகாதார சீரழிவால் ஒட்டுமொத்த நகரமக்களும் சிக்கி தவிக்கின்றனர். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க மயிலாடுதுறை நகர மக்கள் தான் பாதிப்பை அனுபவிக்கிறார்கள் என்றால், சுற்றியுள்ள கிராம மக்களும் பாதாள சாக்கடையால் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். ஒட்டுமொத்த கழிவும் மன்னம்பந்தல் பகுதியிலிருந்தே சுத்திகரிக்கப்படாமல் கழிவுகளாகவே சத்தியவாணன் வாய்க்காலில் திறந்துவிடப்படுகிறது. முக்கிய “ஏ” பிரிவு பாசன வாய்க்காலான இந்த வாய்க்காலை நம்பி தான் மன்னம்பந்தல் ,ஆறுபாதி,பரசலூர், மடப்புரம், முக்கரும்பூர், தென்பாதி, காலமநல்லூர்,கிடங்கல்,பூந்தாழை , கருவேலி உள்ளிட்ட மருதம்பள்ளம் உள்ளிட்ட 18 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 3 ஆயிரத்து 800 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. ஆனால் கடந்த 14 ஆண்டுகளாக பாதாள சாக்கடை மலக்கழிவுகளாகவே சத்தியவாணன் வாய்க்காலில் வழிந்தோடி வருவதால் விவசாய நிலங்களில் அந்த கழிவுகளெல்லாம் புகுந்து மண்ணின் தன்மையை பாழாக்கி விவசாயமே செய்யமுடியாத நிலைக்கு போய்விடும் என்பதால் சத்தியவாணன் வாய்க்காலிலிருந்து பிரிந்து செல்லும் 18 க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்களையும் அடைத்துவைத்து விட்டு பம்புசெட் மூலம் விவசாயம் செய்து வருகின்றனர்.அருகிலேயே காவிரி நீர் பாயும் ஆறு,வாய்க்கல்கள் இருந்தாலும் 15 ஆண்டுகளாக காவிரி நீரே இல்லாமல் சாகுபடி செய்யும் ஆபத்தான நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுவிட்டனர். நிரந்தர தீர்வை ஏற்படுத்துவதற்கு பதிலாக கொள்ளையடிப்பதற்காகவே புதிது, புதிதாக திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றுகின்றனர் என திராவிட மக்கள் மசோதா கட்சியின் தலைவர் டாக்டர்.மாயா வெங்கடேசன் கடுமையாக சாடினார். மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை குறிப்பாக கடலோர மீனவ கிராமங்களில் கடலரிப்பு தடுப்புச்சுவர்களை பாரபட்சமின்றி அனைத்து பகுதியிலும் முழுமையாக செய்ய வேண்டும்,110 விதியின் கீழ் அதிமுக ஆட்சியில் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்ட கொள்ளிடம் குறுக்கே நீர் தேக்க அணை எங்கே போனதென தெரியவில்லை, அரசு திட்டங்கள் ஏழைகளுக்கு முறையாக சென்றடைவதில்லை வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்கு என்னும் புனிதமான ஆயுதத்தை முறையாக பயன்படுத்தி நல்லவர்களை, உங்களுக்காக உழைப்பவர்களை தேர்வு செய்யுங்கள் என உரையாற்றினார். பொதுக்கூட்டத்தில் பூம்புகார் தொகுதிக்குட்பட்ட கிராமங்களிலிரு
ந்து நிர்வாகிகள் உள்ளிட்ட ஐந்தாயிரத்துக்கும் மக்கள் திரண்டு கலந்துக் கொண்டனர்.

















