முளை கட்டிய பயிர்கள் புரதம் உள்பட பல ஊட்டச்சத்துகள் நிறைந்தவைதான் என்றாலும் அவை அனைவருக்கும் உகந்தவை அல்ல என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் முளை கட்டிய பயிர்களை சமைக்காமல் உண்பதால் வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் ஆபத்து உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வயிறு சார்ந்த பிரச்சினைகள் உள்ளவர்களும் முளை கட்டிய பயிர்களை உண்பதைத் தவிர்க்க வேண்டும். அவை செரிமானத்துக்குக் கடினமானவை என்பதே காரணம். எதையும் அளவோடும் ஒருவரது உடலின் இயல்பு சார்ந்த கவனத்துடனும் உட்கொள்வது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் சொல்கின்றனர்.