பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சட்டவிரோதமாக ஜவுளி பூங்கா அமைப்பதா ? மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் சிப்காட்டுனுடைய இயக்குனர் செந்தில்ராஜ் சட்டத்திற்கு புறம்பாக பங்கேற்றது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் மன்னார்குடியில் பி ஆர்.பாண்டியன் கண்டனம் .
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்ததாவது காவிரி டெல்டா 2020 ஆம் ஆண்டு முதல் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு வேளாண்மை துறையும் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையும் இரு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது 2016 முதல் காவிரி டெல்டாவில் புதிய கிணறுகள் அமைக்க மாட்டோம் . ஓஎன்ஜிசியை வெளியேற்றி விடுவோம் பேரழிவு திட்டங்களுக்கு அனுமதி இல்லை என மத்திய அரசும் மாநில அரசும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் தென்னிந்திய பசுமை தீர்ப்பாயம் தொடரப்பட்ட வழக்கில் கொள்கை முடிவு எடுத்து எழுத்துப்பூர்வமான ஒப்புதலை நீதிமன்றத்திற்கு தெரிவித்து இருக்கிறார்கள் விரைவில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்று அன்றைக்கே அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் சட்டத்திற்கு விரோதமாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல வரம்புக்குள் வராத ஜவுளி பூங்காவை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நல்ல நிலத்தடி நீர் முப்போகம் விளைவிக்க கூடிய நிலங்கள் தென்னை , வாழை உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும் விளையக்கூடிய பகுதியாக இருக்கிற வளமான பகுதியான ஆலங்கோட்டையை மையமாக வைத்து ஜவுளி பூங்காவை அமைக்க போகிறோம் என்று அடிக்கல் நாட்டியிருப்பது சட்ட விரோதமானது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தையே சீர்குலைக்கும் உள்நோக்கம் கொண்டது இந்த தொழிற்சாலையை அமைத்துவிட்டு நாங்கள் தையல் மட்டும்தான் இங்கே செய்ய இருக்கிறோம் அப்படி என்று அறிவிப்பது மோசடித்தனமானது ஜவுளி பூங்காவை சிப்காட் மூலம் அமைகின்ற அந்த நிறுவனத்திற்கு ஒப்புதல் கொடுப்பதற்கு தொகுப்பு முறையில் சாயப்பட்டறை உள்ளடக்கி தான் அந்த அனுமதி என்று தமிழ்நாடு அரசினுடைய அரசு இதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது உன்மை நிலை இவ்வாறு இருக்க சட்ட விரோதமான காவிரி டெல்டாவில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கு விரோதமாக இந்த ஜவுளி பூங்காவை அமைப்பதற்கு எடுத்திருக்கிற முயற்சி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தையே சீர்குலைக்கிற நடவடிக்கையாகும் வேலை வாய்ப்பு பெண்களுக்கு வழங்குகிறோம் என்று சொல்கிறார்கள் உண்மையாக இருக்குமே ஆனால் இதுவரையிலும் தமிழ் தமிழ்நாடு அரசு தொழில்துறை மூலமாக இணையதள நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் எத்தனை படித்த பட்டதாரிகளுக்கு வேலை வழங்கப்பட்டு இருக்கிறது 5 ஆண்டுகளில் என்பதை பட்டியலை வெளியிட திமுக முன் வர வேண்டும் மாறாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பேரழிவு திட்டங்களை அனுமதிப்பது என்பதும் இதுவரையிலும் சுற்றுச்சூழல் துறையில் எந்தவித விண்ணப்பமும் செய்யாமல் ஒரு தனியார் நிறுவனத்திற்கு அரசுக்கு சொந்தமான பள்ளிக்கூடத்திற்கு சொந்தமான நிலத்தை எடுத்து தாரை வார்த்து ஜவுளி பூங்கா அமைக்கிறோம் என்கிற பெயரில் அடிக்கல் நாட்டுகிற விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் சிப்காட்டுனுடைய இயக்குனர் செந்தில்ராஜ் இவர்கள் பங்கேற்று விழாவில் பங்கேற்று இருப்பது இவர்களுடைய பதவிக்கு அழகல்ல அவர்கள் சட்ட விரோதமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்கள் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக பங்கேற்று இருக்கிறார்கள் அரசியல் சட்ட விதிமுறைகளுக்கு புறம்பாக விழாவில் பங்கேற்றது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் மறுக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக தென்னிந்திய பசுமையை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்வேன் என நான் எச்சரிக்கிறேன் முதலமைச்சர் தலையிட்டு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் அதற்கு எதிரான பேரழிவு திட்டங்களில் நிலத்தடி நீரை அபகரிக்கின்ற நிலத்தடி நீரை மாசு ஏற்படுத்துகின்ற காற்று மாசு ஏற்படுத்துகின்ற மக்கள் வாழ முடியாத நிலைக்கு திருப்பூர் ஈரோடு போன்ற மாவட்டங்கள் தள்ளப்பட்டு இருக்கின்ற நிலையில் இன்றைக்கு திருப்பூரில் இருக்கின்ற நிலத்தடி நீர் சாயப்பட்டறைக்கு கூட பயன்படுத்த முடியாத தகுதியற்ற தண்ணீராக நிலத்தடி நீர் மாறி இருக்கிறது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக பூமியாக இருக்கிற ஆலங்கோட்டையில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு முன் வருவதை தடுத்து நிறுத்த வேண்டும் மறுக்கும் பட்சத்தில் அந்த நிறுவனத்திற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என நான் எச்சரிக்கிறேன் என்றார் .
