பாகிஸ்தானின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற குறியீட்டு பெயரில் தாக்குதலைத் தொடங்கி, பயங்கரவாத முகாம்களை அழித்தது.
இதனைக் தொடர்ந்து பாகிஸ்தான், இந்தியாவை நோக்கி ட்ரோன் மற்றும் ஏவுகணைகளை வீசி பதிலடி கொடுத்தது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் இடையே கடும் பதற்றம் ஏற்பட்டது.
இந்த நிலைமையால், மே 8-ம் தேதி தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து, பிசிசிஐ அறிவிப்பின் படி ஐபிஎல் தொடரானது ஒரு வாரத்துக்கு இடைவேளை எடுத்தது. இந்திய ராணுவத்திற்கு தனது ஆதரவையும் பிசிசிஐ தெரிவித்தது.
மீண்டும் தொடங்கும் ஐபிஎல் – புதிய திட்டங்கள்
போரால் ஏற்பட்ட இடைஞ்சலுக்குப் பிறகு, ஐபிஎல் போட்டிகள் மே 17-ம் தேதி மீண்டும் தொடங்க உள்ளன. இறுதிப் போட்டி ஜூன் 3-ம் தேதி நடைபெறும்.
மொத்தம் 17 போட்டிகள், 6 மைதானங்களில் நடைபெறவுள்ளன. பிளேஆஃப்ஸ் போட்டிக்கான தேதிகள்:
தகுதிச் சுற்று 1 – மே 29
எலிமினேட்டர் – மே 30
தகுதிச் சுற்று 2 – ஜூன் 1
இறுதிப் போட்டி – ஜூன் 3
வெளிநாட்டு வீரர்களுக்குப் பதிலாக மாற்று வீரர்கள்
இடைக்காலத்தில் சில முக்கிய வெளிநாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகள் மற்றும் பயணத்தடைகள் காரணமாக இந்தியாவிற்கு திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால் பல அணிகள் முக்கிய வீரர்களை இழக்க நேரிடும் சூழ்நிலை உருவானது.
இதை கருத்தில் கொண்டு, பிசிசிஐ முக்கிய முடிவெடுத்து, அணிகளுக்கு தற்காலிக மாற்று (Replacement) வீரர்களை சேர்த்துக்கொள்ள அனுமதியளித்துள்ளது.
ஒரு கட்டுப்பாடும் உள்ளது…
இந்த மாற்று வீரர்கள் தற்போது நடைபெறும் 2025 ஐபிஎல் தொடரில் மட்டுமே விளையாட அனுமதிக்கப்படுவார்கள். அவர்கள் 2026 ஐபிஎல் தொடரில் தொடர அனுமதி இல்லை. அடுத்த சீசனில் விளையாட விரும்பினால், மீண்டும் ஐபிஎல் ஏலத்திற்கு பங்கேற்க வேண்டும்.