மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இளம் அதிரடி ஆட்டக்காரரான அபிஷேக் ஷர்மா, நவக்கிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாக விளங்கும் திருவெண்காட்டிற்கு வருகை தந்தார். அங்கு அவர், சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்ததோடு, புதன் பகவானுக்கு நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளிலும் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார்.
முன்னணி கிரிக்கெட் நட்சத்திரம் ஒருவர் திடீரென கோயிலுக்கு வருகை தந்ததை அறிந்த அங்கிருந்த பக்தர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்தனர். அபிஷேக் ஷர்மாவைச் சூழ்ந்து கொண்ட ரசிகர்கள், அவருடன் ஆர்வமுடன் புகைப்படங்கள் மற்றும் செல்பிகளை எடுத்து மகிழ்ந்தனர். ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று, புன்னகையுடன் அவரும் செல்பிகளுக்கு போஸ் கொடுத்தார். இதனால் திருவெண்காடு கோவில் வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பும், உற்சாகமும் நிலவியது.
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில், இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா இன்று சாமி தரிசனம்
