ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் பதினெட்டு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் இரண்டாவது நாளாக கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது :-
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் பதினெட்ட அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. காலியாக உள்ள 1500 க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊராட்சி செயலர்களை தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட உதவிகள் திட்டத்தில் இணைக்க வேண்டும் ஏழு ஆண்டுகள் பணி முடித்துள்ள மேற்பார்வையாளர்கள் அனைவரையும் இளநிலை பொறியாளர் நிலைக்கு தரம் உயர்த்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை குத்தாலம் சீர்காழி செம்பனார்கோயில் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் இழுத்து மூடப்பட்டன. வேலை நிறுத்த போராட்டத்தின் இரண்டாம் நாளான இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் பங்கேற்ற ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

















