திருவிளையாட்டம் கிராமத்தில் போதையில் மோதுவது போல் வந்த இளைஞரை தட்டி கேட்ட திமுக வாக்குசாவடி முகவர் மீது இளைஞர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி கடையை சேதப்படுத்தியும் கடத்திசென்று ஆற்றங்கயோரம் மீண்டும் தாக்கியபோது வீடியோ பதிவு செய்து இளைஞர் கும்பல் வெறிச்செயலில் ஈடுபட்டதாக புகார். 6 பேர் கைது:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிளையாட்டம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருபரன்(35). திருவிளையாட்டம் கடைவீதியில் கோழிக்கடை வைத்துள்ளார். திமுக வாக்குச்சாவடி முகவரான குருபரன் நேற்று இரவு ஊர்க்காரர்களுடன் கடைவீதியில் நின்று கொண்டிருந்த போது பில்லாவிடந்தையைச் சேர்ந்த அந்தோணிராஜ் என்பவரின் மகன் அபிஷேக்,(19) என்பவர் இருசக்கர வாகனத்தில் போதையில் மோதுவது போல் வந்ததால் குருபரன் கண்டித்துள்ளார். தொடர்ந்து வாக்குவாதம் ஏற்பட்டபோது ஊர்க்காரர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த அபிஷேக் இரவு 12 மணி அளவில் தன் கூட்டாளிகளை அழைத்துக் கொண்டு குருபரன் கோழி கடைக்கு வந்து கடையில் தூங்கிக் கொண்டிருந்த குருபரன் மீது போதையில் இருந்த கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக குருபரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கடையை சேதப்படுத்தி குருபரனை இருசக்கர வாகனத்தில் மகிமலையாற்றின் கரை பகுதிக்கு அழைத்து சென்று அங்கு மீண்டும் தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த குருபரன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக குருபரன் அளித்’த புகாரின் பேரில் அபிஷேக் மற்றும் கடலி பிரசன்னா(24), சாமியன்குன்னம் சுபாஷ்(28), மே மாத்தூர் சந்தோஷ் (19), நரசிங்கநத்தம் சூர்யா(20), ராகுல்(17) என்ற சிறுவன் உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், குருபரன் தான் தாக்குதலுக்கு உள்ளான போது தாக்கியவர்கள் வீடியோ எடுத்ததாகவும் அந்த பதிவை காவல்துறை கைப்பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.













