நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இரவில் பொக்லின் வைத்து கடையை இடித்து ரூ.10 லட்சம் பொருட்கள் சேதம்;
நடவடிக்கை கோரி எஸ்பியிடம் புகார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி காமராஜர் வீதியில் வழக்கறிஞர் கமாலுதீன் என்பவரின் மாமியார் நாளீராபேகம்(55) என்பவர் 15 ஆண்டுகளாக பேன்சி ஸ்டோர் வைத்து நடத்திவருகிறார். 2023ஆம் ஆண்டுமுதல் கடை உரிமையாளருக்கும் இவருக்கும் சீர்காழி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே சென்ற ஆண்டு கடை வாயிலில் நள்ளிரவு பூஜை நடத்தியது தொடர்பாக நாளீராபேகம் சீர்காழி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் நேற்று 11-ஆம் தேதி நள்ளிரவு பொக்லின் எந்திரம்மூலம் கடையை இடித்துள்ளனர், இதுகுறித்து நாளீராபேகம், வழக்கறிஞர்களுடன் சென்று மயிலாடுதுறை எஸ்பியிடம் புகார் அளித்து, கடையை இடித்த நபர்கள் மீதும் அதற்குக் காரணமானவர்கள்மீதும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
சனிக்கிழமை மயிலாடுதுறை நீதிமன்றத்திற்கு வருகைதரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியிடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
