ஆம்பூரில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் தவறாக பேசி பாலியல் தொழில் செய்ய அழைத்த ஆட்டோ ஓட்டுநர் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரி பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் சரவணன் இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை உமர் சாலையில் உள்ள நியாய விலை கடைக்கு ஏற்றிச் சென்றுள்ளார்.
அப்போது ஆட்டோ ஓட்டுனர் சரவணனிடம் அவர் பேசிக் கொண்டிருந்தபோது தனது குடும்ப சூழ்நிலை குறித்து தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது என்பதை தெரிவித்துள்ளார் இதனை தொடர்ந்து ஆட்டோ ஓட்டுனர் சரவணன் நான் சொல்வதைக் கேட்டால் உனக்கு பணம் கிடைக்கும் என்று தவறான நோக்கத்துடன் பேசியதாகவும் இது குறித்து அந்தப் பெண் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் புகாரியின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ஆட்டோ ஓட்டுனர் சரவணன் கைது செய்து ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.
மேலும் விவாகரத்து ஆன பெண்ணிடம் தவறாக பேசிய ஆட்டோ ஓட்டுநரை கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…







