தனுஷ் பிறந்த நாளில் ‘இட்லி கடை’ முதல் சிங்கிள்? ரசிகர்களுக்கு குஷி

நடிகர் தனுஷ் இயக்கும் நான்காவது படமாக உருவாகியுள்ளது ‘இட்லி கடை’. இது அவர் நடித்த 52-வது திரைப்படமாகும். தனுஷ் இப்படத்தில் இயக்குநராக, நாயகனாகவும் நடித்துள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பை மேற்கொண்டுள்ளது. மக்கள் மத்தியில் இப்படம் எந்தவொரு கதைக்களத்துடன் உருவாகியுள்ளது என்பதைப் பற்றிய ஆர்வம் அதிகரித்து வருகிறது.

தற்போதுள்ள தகவல்களின் படி, அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘இட்லி கடை’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ஆடியோ உரிமையை சரிகமா இசை நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும்,

இப்படத்தின் முதல் பாடல் (First Single) தனுஷின் பிறந்தநாள் ஜூலை 28-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

Exit mobile version