இட்லி கடை படத்தின் First Single!

நடிகர் தனுஷ் இயக்கும் நான்காவது திரைப்படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இதுவே அவர் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசை இசைமழை பொழிவாகும்.

‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில், நடிகர் அருண் விஜய் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படம் எவ்வாறான கதைக்களத்தில் உருவாகி வருகிறது என்பதற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

இந்த திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் ஆடியோ உரிமையை சரிகமா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

தனுஷின் பிறந்த நாளான ஜூலை 27ஆம் தேதி படத்தின் முதல் பாடல் (First Single) வெளியாகும் என்றும், இதற்கான அறிவிப்பை ஒரு சிறப்பு போஸ்டர் மூலம் படக்குழு வெளியிட்டுள்ளது.

Exit mobile version