இட்லி கடை வெற்றி பெற, மக்களுக்கு இட்லி

நடிகர் தனுஷின் இட்லி கடை திரைப்படம் வெற்றி பெற,பொது மக்களுக்கு இட்லி வழங்கி,தனுஷின் கட்டவுட்டிற்க்கு பாலபிஷேகம், பீர் அபிஷேகம் செய்து ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாடினார்கள்

ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில், தனுஷ் இயக்கத்தில், நித்யா மேனன் அருண் விஜய், சத்யராஜ், பிரகாஷ்ராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் இன்று நாடு முழுவதும் வெளியானது.
அதேபோன்று ‌புதுச்சேரியில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இட்லி கடை திரைப்படம் வெளியானது.

இட்லி கடை திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என புதுச்சேரி தனுஷ் தலைமை ரசிகர் மன்ற நிர்வாகி சதீஷ் தலைமையில், திரைப்படம் வெளியான திருவள்ளூர் சாலை மற்றும் காமராஜர் சாலை தியேட்டர் முன்பு படம் பார்க்க வந்த ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு காலை சிற்றுண்டியாக இலவசமாக இட்லி வழங்கி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்தினார்.திரைப்படம் பார்க்க வந்தவர்களும் பொது மக்களும் இட்லியை ஆர்வமுடன் வாங்கி சாப்பிட்டனர்.

மேலும் தனுஷ் கட்டவுட் மற்றும் பேனருக்கு பாலபிஷேகம், பீர், அபிஷேகம் செய்தும் மாலை அணிவித்து மலர் தூவி பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினார்கள். இதேபோன்று திரைப்பட வெளியான அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாட்டினார்கள்.

Exit mobile version