தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் அனுஷ்கா ஷெட்டி, கடந்த ஜூலை மாதம் சினிமா உலகில் 20 ஆண்டுகளை நிறைவு செய்தார். மேலும், செப்டம்பர் 5ஆம் தேதி கிரிஷ் இயக்கத்தில் அவர் நடித்த காட்டி படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இருந்து சிறிதுகாலம் விலகி இருக்கப்போவதாக அனுஷ்கா அறிவித்துள்ளார். தனது பக்கத்தில் பதிவிட்டுள்ள குறிப்பில்,
“நீல ஒளியை மெழுகுவர்த்தி வெளிச்சத்திற்காக விற்கிறேன். மீண்டும் உலகத்துடன் தொடர்புகொள்ளவும், ஸ்க்ரோலிங்கைத் தாண்டிய பணிகளைத் தொடரவும், நாம் அனைவரும் எங்கிருந்து துவங்கினோமோ அங்கு இணையவும் சிறிதுகாலம் சமூக வலைத்தளங்களில் இருந்து விலகுகிறேன். இன்னும் நிறைய கதைகளுடன், நிறைய காதலுடன் விரைவில் உங்களை சந்திக்கிறேன். அப்போதும் மகிழ்வோடு இருங்கள். அன்புடன், அனுஷ்கா” என தெரிவித்துள்ளார்.
சில வருடங்களாக பொதுவெளியில் அதிகமாக தோன்றாததற்கான காரணம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில்,
“சில தனிப்பட்ட காரணங்களுக்காக இதனைச் செய்கிறேன். நான் எப்போதுமே தனிமையான நபர்தான். ஆனால் விரைவில் ரசிகர்களை நேரில் சந்திப்பேன்” என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து தற்போது சமூக வலைத்தளங்களிலிருந்தும் தற்காலிகமாக விலகுவதாக அனுஷ்கா அறிவித்துள்ளது.
திரையுலகில் அடுத்ததாக, அவர் மலையாளத்தில் நடிக்கும் முதல் படம் Kathanar: The Wild Sorcerer. இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.