“டியூட் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைப்பது மகிழ்ச்சி” – பிரதீப் ரங்கநாதன்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ள ‘டியூட்’ திரைப்படம் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால் நடிகர் பிரதீப் ரங்கநாதன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ இணைந்து நடித்துள்ள இந்த ரொமான்டிக்-என்டர்டெயின்மெண்ட் படம், திரையரங்குகளில் ரசிகர்களின் உற்சாக வரவேற்புடன் திரையிடப்படுகிறது.

படம் வெளியானதையொட்டி சென்னையில் பல இடங்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். குறிப்பாக குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் பிரதீப் ரங்கநாதனுக்காக ரசிகர்கள் பெரிய கட்டவுட் அமைத்து, தாளங்கள் ஒலிக்க வைத்தனர்.

அந்த இடத்துக்கு பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, இயக்குனர் கீர்த்தீஸ்வரன், இசையமைப்பாளர் சாய் அபயங்கர் ஆகியோர் நேரில் வந்து ரசிகர்களுடன் சேர்ந்து முதல் காட்சியைப் பார்த்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் கீர்த்தீஸ்வரன்,

“ரசிகர்களிடமிருந்து வரும் வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றி. விரைவில் அடுத்த படத்திற்கான தகவலை வெளியிடுவோம்,”
என்று கூறினார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன்,

“தீபாவளியில் வெளியாகும் எனது முதல் திரைப்படம் இது. ரசிகர்கள் படம் ரசித்த விதம் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது எனக்கு பெரிய உற்சாகம்,” என்று தெரிவித்தார்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர், “திரையரங்கில் பாடல்கள் ஒலிக்கும் போதே ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். அது ஒரு மறக்கமுடியாத அனுபவம். விரைவில் என் அடுத்த படத் திட்டம் குறித்து அறிவிப்பேன்,” என்றார்.

Exit mobile version