• Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6
Retrotamil
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
  • Home
  • News
  • Cinema
  • Bakthi
  • Sports
  • Business
  • Rasipalan
  • Gadget
No Result
View All Result
Retrotamil
No Result
View All Result
Home News

“என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தை அனுபவித்து வருகிறேன்” – ஆதவ் அர்ஜுனா உணர்ச்சி பூர்வ பதிவு

by Priscilla
September 29, 2025
in News
0
“என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தை அனுபவித்து வருகிறேன்” – ஆதவ் அர்ஜுனா உணர்ச்சி பூர்வ பதிவு
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் நடைபெற்ற தவெக தலைவர் விஜயின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் கரூர் மாவட்டத்திலேயே 27 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தது அப்பகுதி மக்களின் மனதை பெரிதும் வேதனைப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சம்பவத்துக்குப் பிறகு இரண்டு நாட்கள் கழித்து தவெக இளைஞர் தலைவர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்த சம்பவம் தனது வாழ்வின் மிகப்பெரிய துக்கமாக உள்ளதாகவும், அந்த வலியை இன்னும் தாங்கிக் கொள்ள முடியாமல் தவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறுவயதிலேயே தாயை இழந்த துயர அனுபவத்தை நினைவுகூர்ந்த அவர், “ஒரு மரணத்தின் வலியைச் சிறுவனாக இருந்தபோது உணர்ந்தவன் நான். அதே வலியை மீண்டும் இப்போது உணர வைத்துள்ளது இந்த உயிரிழப்புகள். உறவுகளை இழந்த குடும்பங்களின் அழுகுரலே என்னை தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது” என பதிவு செய்துள்ளார்.

“இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அண்ணனாகவும், தம்பியாகவும், மகனாகவும் இருக்கும் உணர்வோடு, அவர்கள் கனவுகளையும் நம்பிக்கைகளையும் சுமந்து செல்லும் உறவாக என் வாழ்க்கைப் பயணம் இருக்கும். இழப்புகளைச் சந்தித்த என் உறவுகளுக்கு ஒருவனாய் என் எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது பதிவின் இறுதியில், “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்” எனும் வரிகளைக் குறிப்பிட்டு, தன் வேதனையையும் மன வேதனையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

Tags: aadhav arjunaKarur districtSTAMPEDE INCIDENTTVKTVK VIJAYVIJAY CAMPAIGN
Previous Post

சிறுமியை காணோம்னு ! விஜய் மைக்கில் அறிவிச்சாரே! அது என் குழந்தைதான் ! அருணா ஜெகதீசனிடம் தந்தை கண்ணீர் !

Next Post

கரூர் நெரிசல் : வதந்தி பரப்ப வேண்டாம் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

Related Posts

தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

திண்டுக்கல் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கு பெருவிழா

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மார்த்தாண்டம் ஐவிஷன் மல்டி மார்ட் எம் எல் எம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் 1 1/2 கோடி மோசடி

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மயிலாடுதுறையில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவிற்கு தவெகவினர் மௌன ஊர்வலம்

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

வேலூர் செல்லியம்மன் ஆலயத்தில் திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்ற கோரியும் அரசு நல்ல புத்தி வர இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

திருமண மறுவீட்டிற்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிய போது 100 அடி பள்ளத்தில் வேன் விபத்தில் 3 பேர் பலி

November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

உலக புகழ் பெற்ற நாகூர் ஆண்டவருக்கு சந்தனம் பூசும் வைபவம் இன்று காலை அதி விமர்சையாக நடைபெற்றது

November 20, 2026
Next Post
கரூர் நெரிசல் : வதந்தி பரப்ப வேண்டாம் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

கரூர் நெரிசல் : வதந்தி பரப்ப வேண்டாம் – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

திண்டுக்கல் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த கதிர் நரசிங்க பெருமாள் கோயில் குடமுழுக்கு பெருவிழா

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மார்த்தாண்டம் ஐவிஷன் மல்டி மார்ட் எம் எல் எம் என்ற பெயரில் தனியார் நிறுவனம் 1 1/2 கோடி மோசடி

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

மயிலாடுதுறையில் கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ்.பாபு மறைவிற்கு தவெகவினர் மௌன ஊர்வலம்

by Satheesa
November 20, 2026
தேசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் போட்டியில் வெற்றி பெற்று, இங்கிலாந்து இளவரசர் கையால் பரிசு
News

வேலூர் செல்லியம்மன் ஆலயத்தில் திருப்பரங்குன்றம் மலை தீபம் ஏற்ற கோரியும் அரசு நல்ல புத்தி வர இந்து முன்னணி சார்பில் ஆர்பாட்டம்

by Satheesa
November 20, 2026
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • Home 1
  • Home 2
  • Home 3
  • Home 4
  • Home 5
  • Home 6