கணவர் வெளிநாட்டில் வேலை மாமனார் பாலியல் துன்புறுத்தல் உறவினர்கள் மேல்முறையீட்டு புகார் 

கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் நிலையில், மாமனார் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், பெண்மணி புகார், வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறையினர், பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக தெரிவித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண்மணி மற்றும் அவரது உறவினர்கள் மேல்முறையீட்டு புகார் :-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலச்சாலை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஆசியா பர்வீன், இவருக்கும் பெருந்தோட்டத்தைச் சேர்ந்த ரியாசுதீன் ஆகிய இருவருக்கும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 12 வயது பெண் குழந்தை உள்ளது. தற்போது ரியாசுதீன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆசியா பர்வீன், பெருந்தோட்டத்தில் உள்ள தனது கணவர் இல்லத்தில் தனது மகளுடன் வசித்து வந்தார். இவரது மாமனார் குத்புதீன் என்பவர் மருமகள் ஆசியா பர்வீனுக்கு , பாலியல் ரீதியான தொந்தரவுகள் அளித்துள்ளதாக ஆசியா பர்வீன் குற்றம் சாட்டுகிறார். தொடர்ந்து மூன்று மாதமாக இது போல் தொல்லை தந்ததால் இது குறித்து தனது கணவரிடம் எடுத்துக் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லாத நிலையில், சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார் மேலும் தனது 12 வயது மகளை தன்னுடன் அனுப்ப மறுத்து தன்னை மட்டும் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாக புகார் தெரிவித்துள்ள ஆசியா பர்வீன், இது குறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாமனாரை அழைத்து விசாரணை மேற்கொண்டதும், தனது கணவர் வெளிநாட்டில் இருந்து வந்தவுடன் தனியாக தங்க வைப்பதாக பஞ்சாயத்து பேசி அனுப்பி விட்டதாகவும், மாமனார் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்ததற்கு எந்தவித வழக்கு பதிவும் செய்யவில்லை என்று ஆசியா பர்வின் குற்றம் சாட்டியுள்ளார். அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நடவடிக்கை இல்லாத காரணத்தால், தனது உறவினர்களுடன் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் புகார் அளித்தார். தற்போது ஆதரவற்ற நிலையில் தனது தாய் வீட்டில் வசித்து வருவதாகவும், வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவன் தனக்கு ஆதரவாக இல்லை என்றும், பாலியல் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்காமல் குடும்ப பிரச்சினை கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கை திசை திருப்புவதாகவும் பாதிக்கப்பட்ட பெண்மணி குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version