கணவன் மனைவி விஷம் அருந்தி தற்கொலை.மூன்று நாட்கள் கழித்து அழுகிய நிலையில் உடலை மீட்ட போலீசார்..
திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட கடகம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ் வயது 55.இவர் பந்தல் அமைக்கும் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி மல்லிகா 50.இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இரண்டு மகள்கள்களையும் திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.இதில் இளைய மகளான சுகந்தி நேற்று முன்தினம் அப்பாவுக்கு போன் செய்துள்ளார். அப்பொழுது ஃபோன் எடுக்கவில்லை என்கிற காரணத்தால் மீண்டும் மீண்டும் முயற்சித்தும் ராஜ் போனை எடுக்கவில்லை
இதில் சந்தேகம் அடைந்த சுகந்தி நேராக கடகம்பாடி வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கொள்ளைப்புரத்தில் இருவரும் அழுகிய நிலையில் இறந்து கிடந்துள்ளனர்.
மேலும் அவர்கள் சடலத்திற்கு அருகாமையில் விஷ பாட்டில்கள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுகந்தி பலரால் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை யடுத்து பேரளம் போலீசார் நிகழ்விடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கணவன் மனைவி இருவரும் அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
