மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டி – ஊர் திரும்பிய மாணவனுக்கு உற்சாக வரவேற்பு

பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெண்கல பதக்கம் பெற்று ஊர் திரும்பிய மயிலாடுதுறை பள்ளி மாணவனுக்கு பள்ளி நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு. சால்வை மாலை அணிவித்து மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்து வாசல் வரை ஊர்வலமாக அழைத்து வந்து வாழ்த்து:-

தேனி மாவட்டம் கம்பத்தில் தமிழக பள்ளிக் கல்விதுறை சார்பாக கடந்த 6, 7 ஆகிய இரண்டு நாட்கள் மாநில அளவிலான குத்துச் சண்டை போட்டி நடைப்பெற்றது. அப்போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு பகுதியில் உள்ள ராஜ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் தர்ஷன், 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் 48-50 கிலோ எடை பிரிவில் மாநில அளவில் வெண்கல பதக்கம் வென்றெடுத்தார். வெண்கலப்பதக்கம் வென்றெடுத்து ஊர் திரும்பிய மாணவனுக்கு ராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
வெற்றி பெற்ற மாணவனையும் பயிற்சி அளித்த ஆசிரியரையும், பள்ளி தாளாளர் வெங்கட்ராமன், செயலர் ஸ்ரீராமன், மற்றும் முதல்வர் மாணவனுக்கு சால்வை மாலை அணிவித்து ரயில் நிலையத்திலிருந்து வாயில் வரை ஊர்வலமாக அழைத்து வந்தனர். மாணவனின் உறவினர்கள் மாணவனை தோளில் தூக்கி மகிழ்ச்சி அடைந்தனர். இதில் மாணவனின் பெற்றோர்கள் பாமக மாவட்ட செயலாளர் சித்தமல்லி பழனிச்சாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Exit mobile version