வெனிசுலா அதிபர் நிகோலஸ், அமெரிக்காவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதையடுத்து வெனிசுலாவில் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்
அமெரிக்காவுக்கு போதை பொருட்களை கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியதாக குற்றஞ்சாட்டி, தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீது அமெரிக்கா நேற்று அதிகாலை குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் வெனிசுலாவில் 40 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே, வெனிசுலா அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவின் புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறைக்கு அதிபர் மதுரோ அழைத்து செல்லப்பட்ட வீடியோவை வெளியிட்டு அமெரிக்க வெள்ளை மாளிகை உறுதி செய்திருக்கிறது.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை, அமெரிக்கா கைது செய்த நிலையில் இடைக்கால அதிபர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெனிசுலாவின் தற்போது இருக்கும் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்-ஐ இடைக்கால அதிபராக அந்நாட்டு உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.
















